ரெய்டுகள், இரட்டை இலை சின்னம்.. சசி குடும்பத்தை ஒரு வேளை ஜெ. ஆவி பழி வாங்கிருச்சோ??
சசிகலா உறவினர்கள் வீடுகளில் ரெய்டு, இரட்டை இலை கிடைக்காதது போன்றவற்றில் சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதாவின் ஆவி பழிவாங்கி விட்டதாக ஒரு குரூப் கிளம்பியுள்ளது.
சென்னை: சசிகலா உறவினர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தியது, விசாரணைக்கு உட்படுத்துவது, இரட்டை இலை சின்னம் கிடைக்காதது போன்ற விவகாரங்களில் சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதாவின் ஆவி பழிவாங்குகிறதோ என்னவோ.
ஜெயலலிதாவின் ஆவி அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில் இருப்பதாக ஒரு தகவலை கிளப்பி விட்டனர். இதனால் அங்கு டேரா போட்டிருந்த சசிகலா குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், இதற்கு ஆவியின் தொல்லையே காரணம் என்றும் கூறப்பட்டது.
கேரள நம்பூதிரி ஒருவரும் இதே கதையை ஆக்ஷனுடன் தெரிவித்தார். ஜெயலலிதாவின் ஆவி தன்னுடன் பேசியதாகவும் அது 20 முதல் 30 பேர் வரை பழிவாங்க காத்துக் கிடப்பதாகவும் போட்டுத் தாக்கினார்.

வருமான வரித் துறை ரெய்டு
சசிகலாவின் உறவினர்களின் வீடு மற்றும் நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரெய்டு நடத்தினர். அப்போது அங்கிருந்து ரூ.1430 கோடி சொத்துகளும், ரொக்கம், தங்க நகைகள் என பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இளவரசியிடம் புலம்பல்
5 நாட்கள், மொத்தம் 187 இடங்களில் நடந்த மாபெரும் ரெய்டு குறித்து அன்றாடம் டிவி சேனல்களையும், செய்தித் தாள்களையும் படித்து தெரிந்து கொண்டாராம். பின்னர் அண்ணி இளவரசியிடம் புலம்பி தீர்த்து விட்டாராம். இரவில் தூக்கம் இல்லாமல் அவர் தவித்ததாகவும் கூறப்படுகிறது.

சசிகலாவின் 4 அறைகள்
187 இடங்கள் முடிந்த பிறகு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலும் அந்த ரெய்டு நடைபெற்றது. அப்போதும் ஒரு டெம்போ நிறைய ஆவணங்கள், ஆதாரங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றனர். சசிகலாவின் 4 அறைகளிலும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் ஒரு அறையிலும் மட்டுமே அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சிறையில் விசாரணை
தேவைப்பட்டால் சசிகலா, இளவரசியிடம் நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று விசாரிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சின்னம்மா சின்னம்மா என்றவர்கள் தற்போது அவரையும் தினகரனையும் ஒதுக்கி வைத்தனர். ஆட்சி இல்லாவிட்டால் கட்சியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் கட்சியை எடப்பாடி- ஓபிஎஸ் அணியினர் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொண்டனர்.

தேர்தல் ஆணையம் கைவிட்டது
தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில எம்எல்ஏக்கள், முன்னாள் நிர்வாகிகள், சில தொண்டர்களின் ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றி கட்சியை தன் கட்டுக்குள் கொண்டு வர தினகரன் முயற்சித்தார். ஆனால் தேர்தல் ஆணையமோ இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி -ஓபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கிவிட்டது.

ஆவி வேலையா
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மேல் ஜெயலலிதாவின் ஆவி கோபத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில் ஐடி ரெய்டு, கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்தது, இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனது, சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சொகுசு கார் வழக்கில் கிடைக்கப்பட்ட சிறை தண்டனை உள்ளிட்டவை எல்லாம் ஆவியின் வேலையோ என்று ஒரு குரூப் கிளம்பியுள்ளது.
நல்லா பாருங்கப்பா.. ஏதாவது இட்லி ஆவியா இருக்கப் போகுது!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications