For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோசமான நிலையில்தான் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் - இந்திய மருத்துவ கவுன்சில்

ஜெயலலிதா மோசமான நிலையில்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மோசமான நிலையில்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த குறையும் இல்லை என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கமளித்துள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் மாநிலத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோதே அவரது நிலைமை மோசமாக இருந்தது என அவர் தெரிவித்தார்.

Jayalalitha was admitted to hospital in critical condition: Indian Medical Council

ஜெயலலிதாவுக்கு தவறான சிகிச்சையளிக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த குறையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த 31 மருத்துவர்களும் தவறாக கூறுவார்களா? இந்திய மருத்துவ கவுன்சிலின் மாநிலத் தலைவர் ரவிசங்கர் கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் வெளியிடப்படுகிறது என்றும் அவர் கூறினார். நோயாளியை காப்பாற்றுவதே மருத்துவர்களின் பணி என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
Jayalalitha was admitted to hospital in critical condition, according to the Indian Medical Council. Medical Council of India explained that there was no compromise for Jayalalitha's treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X