மனோரமாவுடன் நடித்த அனுபவங்கள் நினைவில் பசுமையாக உள்ளது... ஜெயலலிதா இரங்கல்
சென்னை: நடிகை மனோரமாவின் மறைவு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புரிந்தவர் நடிகை மனோரமா. தமிழ் சினிமாவில் என்றென்றும் தனக்கென தனி முத்திரை படைத்து, அனைவராலும் ஆச்சி என செல்லமாக அழைக்கப்பட்ட இவர், நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்.

சென்னை தி.நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மனோரமாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மனோரமாவின் இழப்பிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மனோரமாவின் மரணம் குறித்து கேள்விப்பட்டு மன வேதனை அடைந்தேன். மனோரமாவின் மறைவு, தமிழ்த்திரைப்படத்துறைக்கு பெரும் இழப்பு. அவரது இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவருடன் நடித்த அனுபவங்கள் மனதில் பசுமையாக உள்ளது' என இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மனோரமாவுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் ஜெயலலிதா. கலாட்டா கல்யாணம் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து அசத்தியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications