ஆர்.கே.நகர்... சசிகலாவுடன் வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் ஜெ
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதாவுக்கு வழிநெடுகிலும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 27-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளரை நிறுத்துகிறது.
பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளும் ஓரிரு நாளில் தங்கள் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன. ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந்தேதி தொடங்கியது.
இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. வேட்பாளரான முதல்வர் ஜெயலலிதா, தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகம் 4-ல் உள்ள தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் அங்கே கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்களைப் பார்த்தை கையசைத்துவிட்டு ஜெயலலிதா புறப்பட்டார். ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் வந்திருந்தார்.
ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கலின் போது நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், வெங்கடேஷ்பாபு எம்.பி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

முன்னதாக வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதாவுக்கு வழிநெடுகிலும் அண்ணா தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications