பெண்மை இன்றி அமையாது உலகு: ஜெயலலிதா மகளிர் தின வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் எப்பொழுதும் வெற்றியின் வடிவம்; பெண் தியாகத்தின் ஊற்று; பெண்மை இன்றி அமையாது உலகு என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக உலகப் பெண்கள் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை என்று வாழ்வில் அனைத்து களங்களிலும் பெற்று வரும் மகத்தான வெற்றிகளை நினைவுபடுத்தவும், பெண்கள் வெற்றி கொள்ள வேண்டிய களங்களும், சவால்களும் இன்னும் ஏராளமாகக் காத்திருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவும் இந்நாள் மகளிர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

வெற்றிக்கு பாராட்டு

வெற்றிக்கு பாராட்டு

பெண் இனம் அடைந்திருக்கும் வெற்றிகள் அனைத்திற்கும் என் பாராட்டுக்கள்; அடையப் போகும் வெற்றிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணை.

பெண் எப்பொழுதும் வெற்றியின் வடிவம்; பெண் தியாகத்தின் ஊற்று; பெண்மை இன்றி அமையாது உலகு. பெண்மை வாழ்க! பெண் இனம் வாழ்க! - என்று இந்த உலக மகளிர் தின நன்னாளில் இல்லத்தரசிகளாகவும்; பல்வேறு துறைகளில் பணிபுரியும் உழைக்கும் மகளிராகவும்; எதிர்காலத்தில் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தும் கனவுகளுடன் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாணவிகளாகவும்; இயன்றது அனைத்தையும் தம் குடும்பங்களுக்குத் தந்து, குடும்பத்தில் உள்ளோரின் உயர்விலும், மகிழ்ச்சியிலும் மன நிறைவு கொண்டு வாழும் தாய்மார்களாகவும் விளங்குகின்ற என் அன்புச் சகோதரிகளுக்கு எனது உளமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதனை பெண்கள்

சாதனை பெண்கள்

கடந்த காலங்களிலும்; அறிவியலும், நாகரீகமும் பெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கும் இந்தக் காலத்திலும் ஒரு பெண் சமூகத்தில் சாதனையாளராக மட்டுமல்ல, சாமானியராக வாழ்வது கூட பெரும் சவாலாகத் தான் உள்ளது.

இறைவன் ஆணையும், பெண்ணையும் அறிவிலும், ஆற்றலிலும் சமமாகத் தான் படைத்துள்ளார். வாய்ப்புகள் வெவ்வேறு வடிவங்களைப் பெறுவதாலும், பல நேரங்களில் பெண்ணுக்கு அவை மறுக்கப்படுவதாலும் சமூகத்தில் பெண்கள் தங்களுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்திக் கொள்ள இயலாமல் போயிற்று. ஆனால், பெண் இனம் சம வாய்ப்பும், சம மரியாதையும் பெற்றால் மட்டுமே ஒரு சமூகம் முழுமை பெற்ற சமூகமாகவும், வளர்ச்சி அடைந்த சமூகமாகவும் மாறும் என்பதை உலகம் உணரத் தொடங்கிவிட்டது.

நல்வாழ்த்துக்கள்

நல்வாழ்த்துக்கள்

பெற்றிருக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, தங்கள் முழு ஆற்றலோடும், உற்சாகத்தோடும் உழைத்து, இன்னும் எண்ணற்ற வெற்றிகளை பெண் இனம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு என்னுடைய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதனைப் பெண்களைப் போற்றும் வகையில், வீர, தீரச் செயல் புரியும் பெண்களுக்கு "கல்பனா சாவ்லா விருது", சிறந்தப் பெண்மணிக்கு "அவ்வையார் விருது" ஆகியவை அதிமுக தலைமையிலான தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மகளிருக்கென விருது

மகளிருக்கென விருது

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, தமிழ் நாட்டில் 10 இடங்களில் மகளிருக்கென மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. இவற்றில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றிருக்கின்றனர் என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

வெற்றியை கொண்டாடுங்கள்

வெற்றியை கொண்டாடுங்கள்

மேலும், கழக மகளிர் அணியினர் ஏற்பாடு செய்திருக்கும் பேரணி, கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகியவற்றிலும்; தலைமைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மகளிர் தின கொண்டாட்டத்திலும் மகளிர் அணியினர் பெருந்திரளான அளவில் பங்குபெற்று உலகப் பெண்களின் வெற்றியைக் கொண்டாடி மகிழுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பெண்மைக்கு வாழ்த்து

பெண்மைக்கு வாழ்த்து

அது போலவே, உழைக்கும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவியருக்கு இனிப்பும், பூங்கொத்தும் வழங்குகின்ற நிகழ்ச்சியிலும் மகளிர் அணியினர் பெருந்திரளாகக் கலந்து கொண்டு பெண்மையை வாழ்த்திடுங்கள்.

பெண்மை உயர உலகு உயரும். அனைவருக்கும் எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+