ஜெயலலிதா அடித்தே கொல்லப்பட்டார்... கன்னத்தில் காயம் இருந்தது... பொன்னையன் பகீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடித்தே கொல்லப்பட்டார்; அவரது கன்னத்தில் இருந்த காயங்களே இதற்கு சாட்சி என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி கோஷ்டிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் மும்முரமாக இருக்கின்றன. ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும்; சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை கூண்டோடு நீக்க வேண்டும் என்பது ஓபிஎஸ் அணி நிபந்தனைகள்.

பொன்னையன் பேட்டி

பொன்னையன் பேட்டி

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை எடப்பாடி கோஷ்டி அமைத்துள்ளது. இந்த நிலையில் சன் நியூஸ் டிவி சேனலுக்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பொன்னையன் சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

மயங்கிய நிலையில் ஜெ.

மயங்கிய நிலையில் ஜெ.

அந்த பேட்டியில் பொன்னையன் கூறியுள்ளதாவது:

ஜெயலலிதா மருத்துவமனையில் மயங்கிய நிலையில்தான் கொண்டு செல்லப்பட்டார். அப்படி ஜெயலலிதா மயங்கிய நிலைக்கு செல்ல காரணம் போயஸ் கார்டனில் நடந்த சம்பவங்கள்தான்.

கையெழுத்து போட மறுத்ததால் தாக்குதல்

கையெழுத்து போட மறுத்ததால் தாக்குதல்

போயஸ் கார்டனில் ஸ்டாம் பேப்பரில் கையெழுத்து போட ஜெயலலிதா மறுத்தார். அதனால் அவர் தாக்கப்பட்டார். அப்படி அடித்த காரணத்தால் ஜெயலலிதா மயங்கினார்.

எங்கே பணியாள்?

ஜெயலலிதா தாக்கப்பட்டதன் விளைவுதான் கன்னத்தில் இருக்கும் 4 காயங்கள். ஜெயலலிதா தாக்கப்பட்டதைக் கண்ணிலே பார்த்த வேலை செய்த பணியாள் இன்றுவரை எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

இவ்வாறு பொன்னையன் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Team OPS Senior leader Poonaiyan said that Former TamilNadu Chief Minister Jayalalithaa was attacked at Poes Garden Bungalow by Sasikala.
Please Wait while comments are loading...