தினகரனின் அறிவிப்பு எதுவுமே செல்லாது- அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்-வீடியோ

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் தினகரன் அறிவிப்புகள் எதுவும் செல்லாது என்றும் யார் யார் என்னென்ன பொறுப்புகளில் இருந்தார்களோ அவர்களே தொடர்வார்கள் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் பொதுக்குழுவிற்கு 95% பேர் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் 95% கூட்டத்திற்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jayalalithaa's appointees to continue in post

பல்வேறு அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று சென்னை வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.

இந்த கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது. முதல் தீர்மானமாக இரட்டை இலையை மீட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சிகள் ஒன்றாக இணைந்ததற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதாவினால் நியமனம் செய்யப்பட்டவர்கள் அந்தந்த பதவிகளில் அப்படியே தொடருவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டிடிவி தினகரன் நியமனமே செல்லாது. அவர் வகித்த பதவிகளும் செல்லாது என தீர்மானம் வாசிக்கப்பட்டது.

கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jayalalithaa will be permanent general secretary of AIADMK,Jayalalithaa's appointees to continue in post RB Udaykumar,TN Min reads out resolution at AIADMK GB meeting.
Please Wait while comments are loading...