ஆர்.கே.நகர்... 5 முறை வென்ற அதிமுக... ஜெ.வுக்கு ஜெயம் உறுதி?
சென்னை : சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு சென்னை பகுதியில் உள்ளது ஆர்.கே.நகர் என சுருக்கமாக அழைக்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டசபைத் தொகுதி.
இத்தொகுதியை அதிமுகவின் கோட்டை என்றே கூறலாம். இதுவரை அங்கு நடைபெற்ற ஒன்பது சட்டசபைத் தேர்தலில் ஐந்து முறை அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. திமுகவும், காங்கிரசும் தலா இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளனர்.
அதிலும், கடந்த மூன்று முறையும் அதிமுகவே தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. எனவே, அங்கு ஜெயலலிதா களமிறங்கினார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறுவார் என அதிமுக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இதுவரை அத்தொகுதியில் வெற்றி பெற்றவர்களின் விபரமாவது:-
- 1977ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஐசரி வேலன் வெற்றி பெற்றார்.
- 1980ம் ஆண்டு நடந்த தேர்தலில் (இந்திரா ) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.ராஜசேகரன் வெற்றி பெற்றார்.
- 1984ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேணுகோபால் வெற்றி பெற்றார்.
- 1989ம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த எஸ்.பி. சற்குணம் வெற்றி பெற்றார்.
- 1991ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த மதுசூதனன் வெற்றி பெற்றார்.
- 1996ம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த சற்குணம் வெற்றி பெற்றார்.
- 2001ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த சேகர்பாபு வெற்றி பெற்றார்.
- 2006ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் மீண்டும் சேகர்பாபுவே வெற்றி பெற்றார்.
- 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த வெற்றிவேல் வெற்றி பெற்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications