For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தராதரம் இல்லாம பேசுவது.. பின்னர் மறுப்பது.. எச் ராஜாவை இளைஞர்கள் வெறுக்காமல் என்ன செய்வர்?- ஜோதிமணி

Google Oneindia Tamil News

சென்னை: தராதரம் இல்லாமல் பேசுவது பின்னர் அதை மறுப்பது. இதுதான் எச் ராஜா போன்ற அரசியல்வாதிகளை இளைஞர்கள் வெறுக்க காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எச் ராஜா போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Jothimani condemns H. Rajas comment on Court and Police

அவர் பேசுகையில் போலீஸ் மொத்தமும் கரப்ட் (ஊழல்). போலீஸோட ஈரல் 100 சதவிகிதம் அழுகி போச்சு. நான் இங்க இருக்குற இந்து வீடு வழியா போறேன். முடிஞ்சா தடுத்து பாரு. ஹைகோர்ட்டாவது.... (கெட்டவார்த்தை) . கிறிஸ்துவர், முஸ்லிம், பாதிரியார் கைகூலி நீங்கதான். போலீசுக்கு வெட்கமா இல்லை. பயங்கரவாதிக்கு துணை போறீங்க என்று பேசியுள்ளார்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் எச் ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் எச் ராஜா குறித்து ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் முதலில் எவ்வித தாராதரமும் இல்லாமல் வாய்க்கு வந்தபடி பேசவேண்டியது,பிறகு அதை மறுக்கவேண்டியது.

எச்.ராஜா போன்ற அரசியல்வாதிகள் இருந்தால் இன்றைய இளைஞர்கள் அரசியல்வாதிகளை வெறுக்காமல் வேறென்ன செய்வார்கள்? அரசியல் தலைவர்களுக்கென்று பொறுப்பும், கண்ணியமும் இருக்கவேண்டாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Jothimani condemns H.Raja's comment on Court and Police. She also says this is because youngsters have no faith in H.Raja like politicians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X