கோடநாடு விவகாரத்தில் ‘ட்விஸ்ட்’.. விறுவிறு திருப்பங்களுடன் விசாரணை நடந்த நிலையில் நீதிபதி மாற்றம்!
நீலகிரி : கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை கடந்த ஒரு ஆண்டாக நீதிபதி முருகன் மற்றும் பொறுப்பு நீதிபதி நாராயணன் ஆகிய இருவரும் விசாரித்து வந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் மாற்றப்பட்டு நீதிபதி அப்துல் காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிடிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது முதல் பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முருகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோல, பொறுப்பு நீதிபதியாக இருந்து கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மகிளா நீதிமன்ற நீதிபதி நாராயணனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்த அப்துல் காதர் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்களும், விலை மதிப்புமிக்க பொருட்களும் திருடுபோயின. மேலும், அப்போது பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய நபரான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2017 ஏப்ரல் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

அதேபோல் மற்றொரு டிரைவரான சயான் சென்ற கார் கேரளாவில் விபத்துக்குள்ளானது. இதில் சயானின் மனைவி, மகள் இறந்தனர். சயான் காயத்துடன் உயிர் தப்பினார். கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டாக நீதிபதி முருகன், பொறுப்பு நீதிபதி நாராயணன் ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்த அப்துல் காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications