For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதிபதி குமாரசாமியின் சொத்துக்கள் பற்றி இணையதளம் கூறுவதென்ன?... கருணாநிதி பதில்கள்

Google Oneindia Tamil News

சென்னை : ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அவரை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக இணையதள செய்தியை சுட்டிக்காட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் வடிவிலான அறிக்கையில் கூறியுள்ளதாவது...

karunanithi

கேள்வி : அ.தி.மு.க. அரசினால் முடக்கப்பட்டுள்ள மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் பற்றி மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்திருக்கிறாரே?

கருணாநிதி : "மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தைப் பொறுத்தவரை, நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்க்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தேவைப்பட்டால் ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதையில் சிறிய மாற்றம் அல்லது புதிய பாதை அமைக்கக்கூட நாங்கள் தயாராக உள்ளோம். இத்திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், மிகவும் பழமை வாய்ந்த சென்னை துறைமுகம் வருங்காலத்தில் காட்சிப் பொருளாக மாற வாய்ப் புள்ளது. எனவே, இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்" என்று திட்டம் செயலாக்கம் பெற வேண்டுமென்ற முக்கியத்துவத்தை உணர்ந்து கூறியிருக்கிறார்.

மேலும் அவரது பேட்டியில், "குளச்சல் துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு உலகளாவிய கப்பல்கள், வந்து செல்லும் வசதி உள்ளது. அத்துறைமுகத்தைக் கட்டமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். குளச்சல் துறைமுகத்தை மத்திய அரசே எடுத்து நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால், இந்தியாவிலேயே முதன்மைத் துறைமுகமாக மாற்றப்படும். இதன் மூலம் தென் மாவட்டங்கள் அதிகம் பயன்பெறும். எனவே இந்த விஷயத்தில் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு தமிழக அரசு அல்லவா இறங்கி வர வேண்டும்.

கேள்வி : இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகள் குறித்து, விசாரணை நடத்தும் பொறுப்பினை, அந்தப் படுகொலைகளுக்குக் காரணமான இலங்கை அரசிடமே ஒப்படைக்கப் போவதாக அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறதே?
கருணாநிதி : இதுகுறித்து, ஐக்கிய நாடுகளின் மன்றம் அமைத்த மூவர் குழுவினர் நடத்திய விசாரணையின் மூலம் இலங்கையிலே தமிழ் இனப் படுகொலை நடந்தது உண்மை என்பது வெளிப்பட்டது. 2014ஆம் ஆண்டு மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க அரசு கொண்டு வந்த தீர்மானம், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை விசாரிக்க சுதந்திரமான, நம்பகமான சர்வதேச விசாரணைக் குழு அமைக்கக் கோரியது.

12-8-2012 அன்று நடைபெற்ற "டெசோ" மாநாட்டிலும், 25-3-2013 அன்று நடைபெற்ற தி.மு. கழக, தலைமைச் செயற்குழுவிலும், 15-12-2013 அன்று நடைபெற்ற பொதுக் குழுவிலும், நிறைவேற்றப்பட்ட தீர்மானத் திலேயே "சர்வதேச நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் கண்டறியப்பட்டு, போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இது குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட அனைத்துலக நாடுகளின் விசாரணைக் குழுவை இலங்கைக்குள் நுழைவதற்கே அன்றைய ராஜபக்சே அரசு அனுமதிக்கவில்லை. அதனை அப்போதே நான் அறிக்கை மூலமாக வன்மையாகக் கண்டித்திருக்கிறேன். தற்போது அமெரிக்க அரசின் முடிவு, நடந்து முடிந்த தமிழ் இனப் படுகொலையை முழுமையாக மூடி மறைத்து, போர்க் குற்ற விசாரணையை இலங்கை அரசிடமே ஒப்படைக்க முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. அண்மையில் இலங்கைக்கு வந்துள்ள தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க அரசின் வெளியுற வுத்துறை துணைச் செயலாளர் இதனை வெளிப்படுத்தியிருக்கிறார் என்ற செய்தி வந்துள்ளது. இந்தச் செய்தி உண்மையாகி விடக் கூடாதென்றே நான் விரும்புகிறேன்; மாறாக, உண்மையாக இருக்குமானால், வரலாற்று நிகழ்வுகளைத் திரித்திடும் அமெரிக்க அரசின் இந்த முயற்சியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கேள்வி : முதலமைச்சர் ஜெயலலிதா, 25-8-2015 அன்று படித்த 110வது விதியின் கீழான அறிக்கையில் புதுக்கோட்டையில், ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டிருக்கிறாரே?

கருணாநிதி : இதற்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தம்பி பெரியண்ணன் அரசு விளக்கமாக பதிலளித்திருக்கிறாரே? கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேயே 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதே சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த அன்றைய துணை முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் பேசும்போதே, புதுக்கோட்டையிலும், விருதுநகரிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்து விட்டார். ஆனால் அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில், இத்திட்டம் முடக்கப்பட்டதோடு, தி.மு. கழகத்தின் சார்பாக இந்த மருத்துவக் கல்லூரியைச் செயல்படுத்த வலியுறுத்தியும் செவிமடுக்காத அ.தி.மு.க. அரசு, தற்போது ஆட்சி முடிகின்ற நேரத்தில் புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை முனைந்து செயலாக்கத்துக்குக் கொண்டு வர முடியாத அந்தத் துறையின் அமைச்சர், புதுக்கோட்டைக்கு மருத்துவக் கல்லூரியை அறிவித்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி ஒரு கவிதையே எழுதியிருக்கிறார்.

மேலும் ஜெயலலிதா "கரூரில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க நான் ஏற்கனவே ஆணையிட்டுள்ளேன்" என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகியும் கரூர் மின்னாம்பள்ளியில் இடம் தேர்வு செய்யப்பட்டதைத் தவிர வேறு எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி அறிக்கை விடுத்திருக்கிறார்.

மேலும் அவரது அறிக்கையில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு திறக்கப்பட்ட திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி முந்தைய ஆட்சியில் (தி.மு.க. ஆட்சியில்) 2009ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டதாகும். அதேபோல், சிவகங்கை மருத்துவக் கல்லூரியும் முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டது தான். அதுமட்டுமின்றி, கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட மேலும் ஐந்து மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்காக அ.தி.மு.க. அரசு இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
கடலூர், திண்டுக்கல் ஆகிய நகரங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக 2011ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு 2011ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்புகளை செயல்படுத்த கடந்த நான்காண்டுகளில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றெல்லாம் உண்மைகளைத் தெரிவித்திருக்கிறார். இதையெல்லாம் மறைத்து விட்டுத்தான் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா புதுக்கோட்டையில் மருத்துவக்கல்லூரி என்று புதிய அறிவிப்பைச் செய்வது போலப் பம்மாத்து செய்திருக்கிறார்.

கேள்வி : சொத்துக் குவிப்பு வழக்கில் கூட்டல் கணக்கிலே மிகப் பெரிய தவறைச் செய்து, அதையே அடிப்படையாக வைத்து ஜெயலலிதாவை உயர்நீதிமன்றத்தில் விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி ஓய்வு பெற்று விட்டதாகச் செய்திகள் வந்திருக்கிறதே?
கருணாநிதி : நீதிபதி குமாரசாமி அவர்களைப் பற்றி, Live Law.in என்ற இணையதளத்தில், "Allegations of Corruption against Justice Kumaraswamy who acquitted Jayalalithaa" (ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்) என்ற தலைப்பில் 26-8-2015 அன்று வெளி வந்துள்ள ஒரு செய்தியைப் பார்த்தால், உண்மையைப் புரிந்து கொள்ளலாம். அது வருமாறு...

Justice C.R. Kumaraswamy, who acquitted Tamil Nadu Chief Minister J.Jayalalithaa in the disproportionate assets case recently, has reportedly been accused of acquiring property without following certain norms. The allegations have been leveled by Karnataka Brastachara Nirmoolana Vedike, a group of RTI activists and advocates working towards eradication of corruption in the State. (சொத்துக் குவிப்பு வழக்கில் அண்மையில் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமி வரையறைகள் எதையும் பின்பற்றாமல் சொத்துகளை வாங்கினார் என்று அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. தகவல் பெறும் உரிமை ஆர்வலர்களும், வழக்கறிஞர்களும் அடங்கிய ஒரு குழுவினர், "கர்நாடக பிரஸ்தாசார நிர்மூலன வேதிகே" என அழைக்கப்படுகின்றனர். அக்குழுவினர் ஊழல்களை ஒழிப்பதற்கான முயற்சிகளில் கர்நாடக மாநிலத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் குழுவினர்தான் நீதிபதி குமாரசாமி மீது இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளனர்.)

They have alleged that Justice Kumaraswamy had acquired properties in Bengaluru and Mysuru through Bangalore Development Authority (BDA), Karnataka Housing Board (KHB) and Karnataka State Judicial Employees Housing Society by violating certain norms in the site allotment rules and house building society bye-laws. (மனை ஒதுக்கீட்டுச் சட்டங்களில் சிலவற்றுக்கு முரணாகவும், வீடு கட்டும் சங்கத்தின் துணை விதிகளுக்கு மாறாகவும், பெங்களூரு வளர்ச்சிக் குழுமத்தின் மூலமாகவும், கர்நாடகா வீட்டு வசதி வாரியத்தின் மூலமாகவும், கர்நாடக மாநில நீதித் துறை அலுவலர் குடியிருப்புச் சங்கத்தின் மூலமாகவும், பெங்களூரிலும், மைசூரிலும் நீதிபதி குமாரசாமி சொத்துகளை வாங்கினார் என்று அந்தக் குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்)

The group has posted the complaint to the President of India, the Chief Justice of India and the Chief Justice of Karnataka High Court, demanding a detailed enquiry and initiation of appropriate legal proceedings against the Judge. (நீதிபதி குமாரசாமி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் வேண்டுமென்ற கோரிக்கையுடன் நீதிபதி குமாரசாமியின் மீதான குற்றச்சாட்டு பற்றிய விவரங்களை இந்தியக் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பியிருக்கின்றனர். )

As per a Deccan Chronicle report, documents obtained under the Right to Information Act by Advocate A.R.S. Kumar reveal that Justice Kumaraswamy was allotted a flat No. 180, HIG B-3, First Floor, Block 100 in Kengeri 3rd stage by the Karnataka Housing Board in 1997 while he was serving as a district and sessions judge in Kolar. After this allotment, he submitted one more application to the board seeking allotment for a house under High Income Group (HIG) at Hootagally Colony in KHB Colony, Mysuru in 2001. While working as District and Sessions Judge in Bellary then, he got the Kengeri flat allotment cancelled and acquired the independent house in Hootagally Colony in Mysuru on exchange. (கோலார் மாவட்ட அமர்வு நீதிபதியாக திரு. குமாரசாமி பணியாற்றிக் கொண்டிருந்த போது, 1997 இல் கர்நாடக வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக கெங்கேரியில் 180 எண் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றினை ஒதுக்கீட்டின் மூலமாகப் பெற்றார். இந்த ஒதுக்கீட்டைப் பெற்றதற்குப் பிறகு 2001ஆம் ஆண்டில் மைசூரில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒன்றினை ஒதுக்கித் தர வேண்டுமென்று நீதிபதி குமாரசாமி விண்ணப்பித்தார். பெல்லாரி மாவட்ட அமர்வு நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது, திரு. குமாரசாமி கெங்கேரியில் ஏற்கனவே தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புக்குப் பதிலாக மைசூரில் உள்ள ஹூட்டகள்ளி குடியிருப்பில் தனி வீடு ஒன்றினை ஒதுக்கீடாகப் பெற்றார்.)

In the year 2005, Kumaraswamy's wife M.N. Nagarathnamma who had applied for a BDA site since 1987, in her 6th attempt got a plot measuring 30×40 allotted to her in Jnanabharathi Layout, Block 1 in Valagerahalli. (2005ஆம் ஆண்டில், நீதிபதி குமாரசாமியின் துணைவியார், திருமதி எம்.என். நாகரத்தினம்மா, வலகரஹள்ளியில் ஜனபாரதி லே-அவுட்டில் வீட்டு மனை ஒன்றினை ஒதுக்கீடாகப் பெற்றார்)

The group has alleged that in her application to the BDA, the Judge's wife had concealed the facts about the allotment/cancellation of their Kengeri flat and acquisition of the independent house in Hootagally Colony in Mysuru by her husband. (நீதிபதியின் துணைவியார், ஜனபாரதி வீட்டு மனைக்கான விண்ணப்பத்தில், கெங்கேரியில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றினை ஏற்கனவே பெற்றதையும், பிறகு ஹூட்டகள்ளி காலனியில் தனி வீடு ஒன்றினைப் பெற்றதையும் மறைத்திருக்கிறார்)

In 2005, Justice Kumaraswamy had made a voluntary disclosure on the Karnataka High Court website, which disclosed his flat in Divya Manor Apartments on Venkataswamy Raju Road in Palace Guttahalli in Kumarapark West. (2005ஆம் ஆண்டு, நீதிபதி குமாரசாமி கர்நாடக உயர் நீதிமன்ற இணைய தளத்தில், தனக்கு ஹூட்டகள்ளி வெங்கடசாமி ராஜு சாலையில் அவருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருப்பதாகத் தன்னிச்சையாகத் தகவல் தெரிவித்திருக்கிறார்)

"In 2006, the Karnataka Judicial Employees Housing Building Co-Operative Society Limited went ahead and allotted site no. 176 measuring 4000 square feet in Judicial Layout, Phase 2 in Shivanagar to Kumaraswamy, violating allotment rules and bye-laws of the House Building Co-Operative Society," Advocate Kumar said. (2006ஆம் ஆண்டில் நீதிபதி குமாரசாமி ஒதுக்கீடு விதிகளுக்குப் புறம்பாக 4000 சதுர அடி வீட்டு மனை ஒன்றினை நீதித் துறை அலுவலர்களுக்கான குடியிருப்பில், கர்நாடகா நீதித் துறை அலுவலர் குடியிருப்பு கூட்டுறவு சங்கத்தின் மூலமாகப் பெற்றார்)

In May this year, Justice C.R. Kumaraswamy had allowed the appeals filed by Jayalalithaa and others and reversed the conviction ordered by the trial court. The Trial Court had convicted and sentenced Jayalalithaa and her 3 associates to four years in prison besides imposing a Rs 100 crore fine, on September 27 last year. You may read the judgment here. (இந்த ஆண்டு மே மாதம் நீதிபதி குமாரசாமி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா செய்து கொண்ட மேல் முறையீட்டினை ஏற்றுக் கொண்டு விசாரணை நீதிமன்றத்தின் தண்டனையை தள்ளுபடி செய்தார். விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே ஜெயலலிதாவுக்கும், மற்றும் மூவருக்கும் நான்காண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து 2014 செப்டம்பர் 27ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியிருந்தது.)

The Karnataka Government had filed a 2700 page petition on 23rd June saying that the Karnataka High Court's judgment was a "farce", and that "arithmetical errors made the judgment illegal". The petition has also added that the judgment had resulted in "the miscarriage of justice" and should be quashed. You may read the Live Law story here. You may read more news about Jayalalithaa's DA Case here. (கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கேலிக்கூத்தானது என்றும், அந்தத் தீர்ப்பில் உள்ள கணக்கியல் ரீதியான பிழைகள் அந்தத் தீர்ப்பை சட்டப்படி செல்லாததாக ஆக்கிவிட்டது என்றும் கர்நாடக அரசு ஜூன் 23 அன்று 2,700 பக்கங்கள் கொண்ட மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது. மேலும் அந்தத் தீர்ப்பு நீதியையே தடம் புரளச் செய்திருப்பதால் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மேல் முறையீட்டில் கூறப்பட்டுள்ளது.)

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கட்டுரையைப் படித்த துரைராஜ் ஆனந்தராஜ் என்பவர், "நீதிபதி குமாரசாமிக்கு அமெரிக்காவில் சொத்து இருப்பதாக வதந்திகள் மூலம் தெரிய வருகிறது. மேலும் பிரதமர் மோடி அவர்களின் நண்பரான கௌதம் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னணியாக இருந்திருக்கிறார்" என்று கருத்து தெரிவித்துள்ளார். நீதிபதி குமாரசாமி அவர்களைப் பற்றி இணையதளம் கூறியிருக்கும் கருத்து இதுதான்!

இவ்வாறு தனது கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X