சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளித்த கேரள அரசுக்கு கி.வீரமணி பாராட்டு
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளித்த கேரள அரசுக்கு கி.வீரமணி பாராட்டு
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்று கூறிய கேரள அரசின் நிலைபாட்டை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை என்ற அக்கோயிலின் நடைமுறைச் சம்பிரதாயங்களை வலியுறுத்திடும் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு எதிராக, மனித உரிமையிலும், பாலியல் நீதியிலும் அக்கறையும், கவலையும் கொண்ட கேரளவாழ் பெண்கள், அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இவ்வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் உள்ள அமர்வின் முன் நடைபெற்று வருகிறது.

இதுபோன்றே மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரபல கோயில்களில் (சிங்கணாப்பூர் சனிக்கோயில், நாசிக் திரிசம்பேஷ்வர் கோயில்களில்) பெண்கள் உள்ளே நுழையும், வழிபடும் உரிமைப் போராட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
தொடக்கத்தில் கடும் எதிர்ப்பு - மகாராஷ்டிர பாஜக - சிவசேனா கூட்டணி அரசு தயக்கம் காட்டியும், மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர்களது உரிமைக் குரலுக்குக் கிடைத்த ஆதரவு காரணமாக, அக்கோயில்களில் பெண்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமையைப் பெற்று, பாலியல் நீதி நிலைநாட்டப் பெற்றுள்ளது.
கேரள அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம், சபரிமலை அய்யப்பன் கோயிலில் இளம்பெண்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமை கோரும் வழக்கில் ஆணையிட்டது. முந்தைய அரசு பழைய சம்பிரதாயங்களை மீறக்கூடாது என்று கூறி, பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிப்பதை மறுதலித்துக் கூறியது.
ஆனால், திடீர் திருப்பமாக, பினராய் விஜயன் தலைமையில் புதிதாய் ஆறு மாதங்களுக்குமுன் பதவியேற்ற இடதுசாரி அரசு, இந்து சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமையை - மறுக்கக்கூடாது; என்ற நிலைப்பாட்டை 7.11.2016 ஆம் தேதி தனது வழக்குரைஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
மேலும், நீதிபதிகள் வரவேற்கும் முறையில், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை, அவர்கள் பெண்கள் என்பதால், புறக்கணித்துவிட முடியாது; பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்தால் வழிபாட்டு உரிமையை அவர்களுக்கு மறுப்பது நியாயமல்ல என்ற கருத்தைக் கூறி, பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு வழக்கைத் தள்ளி வைத்துள்ளனர்.
பினராய் விஜயன் தலைமையிலான கேரள அரசின், முற்போக்கு நிலைப்பாடும், மகளிருக்குப் பாலியல் நீதி வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதும் மிகவும் முக்கியமானவை. இங்கு பல ஊர்களில் ஐயப்பன் கோயில் சிலை, பெண் பக்கத்தில் உள்ளதாகவே இருக்கும்பொழுது, பெண்கள் போகக்கூடாது என்பது முரண்பாடு அல்லவா?
கேரளாவில் பகவதியம்மன் கோயில் திருவிழா என்பது என்ன? 10 வயதுக்கு மேற்பட்டு, 50 வயதுக்குட்பட்ட பெண்கள் - மாதவிடாய் காரணமாக - உள்ளே நுழைந்தால் தீட்டு - என்று ஒரு பொருந்தாக் காரணம் கூறப்படுகிறது!
பழைய பத்தாம் பசலித்தனத்தை சனாதனப் போர்வை போர்த்தி மூடி மறைத்து அய்தீகம் பேசுவதில் அர்த்தம் இல்லை. மின்சார விளக்கு உள்ளே வந்துவிட்ட பிறகு, அய்தீகம் - சம்பிரதாயம் பேசுவதில் அர்த்தமுண்டா எனவே, பாலியல் நீதி - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைப்படி மறுக்கப்படக் கூடாது. மக்கள் தொகையில் சரி பகுதியான பெண் மக்களுக்கு ஆதரவளித்த கேரள அரசைப் பாராட்டுகிறோம்.
உச்ச நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு அளித்தால் ஒரு புது யுகம் பிறக்கும்; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமையும் இதே தத்துவ அடிப்படையில்தான் நிறைவேற்றப்படவேண்டிய ஒன்றே'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications