ஆளுநரிடம் உள்ள அரசு ரகசியங்கள் அண்ணாமலைக்கு எப்படி தெரியும்.. கி.வீரமணி கேள்வி!

ஆளுநரிடம் உள்ள அரசு ரகசியங்கள் அண்ணாமலைக்கு எப்படி அத்துபடி - கி.வீரமணி கேள்வி

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: ஆளுநருக்கும் அண்ணாமலைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எழுப்பியுள்ளார்.

பெரம்பலூரில் பழைய பேருந்து நிலையத்தின் அருகே மாவட்ட சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக் கூட்டம் நடந்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் பேசிய வீரமணி, சமூகநீதி பற்றி முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒருவரே போதிய விளக்கத்தை கொடுத்துவிட்டார். பெண்களின் இடஒதுக்கீடு உள்பட திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம் ஆகியவை இருக்கின்றன.

 தமிழக அரசு

தமிழக அரசு

தமிழ்நாடு ஆளுநர் அரசுக்கு புறம்பாக செயல்பட்டு வருகிறார். அரசு ரகசியங்களை வெளியில் சொல்லக் கூடாது என்ற நிலையில் நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்பி தமிழகத்தில் 20 மசோதாவை நிறைவேற்றாமல் அதனை ஆலோசனை செய்யாமல் இருந்து வருகிறார் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

 அண்ணாமலை

அண்ணாமலை

அதற்கு ஆளுநர் பதில் சொல்வதற்கு பதிலாக அண்ணாமலை பதில் சொல்கிறார். அந்த அரசு ரகசியங்கள் மற்றும் ஆவணங்களை வெளியில் சொல்லக் கூடாது என்று பதவிப்பிரமாணத்தில் இருக்கும் போது, அண்ணாமலை இடம் மசோதாவை பற்றி கூறியிருப்பதால் அண்ணாமலை வெளியே வந்து 15 மசோதாதான் பாக்கி உள்ளது. மீதமுள்ள 5 மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என கூறியிருக்கிறார்.

 ஆளுநரின் மசோதா

ஆளுநரின் மசோதா

ஆளுநரின் மசோதா நிறைவேற்றத்திற்கும் அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம். அந்த ரகசியங்களை வெளியிடும் ஆளுநர் பதவியில் இருந்து வெளியேற வேண்டாமா என வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 8ஆம் தேதி வேலைவாய்ப்பின்மை, நிலுவையில் உள்ள மசோதாக்கள், ரயில்வே துறைக்கு பட்ஜெட் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எம்பி கனிமொழி லோக்சபாவில் கேள்வி எழுப்பியிருந்தார்.

20 மசோதாக்கள்

20 மசோதாக்கள்

இதற்கு அண்ணாமலை தனது ட்விட்டரில் பதில் அளித்திருந்தார். அவர் கூறுகையில், ஆளுநர் 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற புகாரை கூறியிருந்தார். கடந்த வாரம் வரை 15 ஆக இருந்த எண்ணிக்கையை அவரது சகோததரான தமிழக முதல்வர் தற்போது 20 என உயர்த்தியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழக பாஜக ஏற்கெனவே ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து தெளிவுப்படுத்தியிருந்தது.

 அந்த 15 மசோதாக்கள் என்னவென பார்க்கலாம்.

அந்த 15 மசோதாக்கள் என்னவென பார்க்கலாம்.

1. தமிழக முதல்வர் தன்னைத்தானே பல்கலைக்கழக வேந்தராக நியமித்த 12 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

2. அரசாங்கத்திற்கு தேவையற்ற அதிகாரங்களை வழங்கும் கூட்டுறவு சங்கங்களின் விதிகளின் திருத்தம் தொடர்பான ஒரு மசோதா நிலுவையில் உள்ளது.

3. எந்தவொரு தனியார் கல்லூரிகளையும் கையகப்படுத்த விரும்பும் தமிழர அரசின் விதியை திருத்தும் ஒரு மசோதா.

4. ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான ஒரு மசோதா

இவ்வாறு அண்ணாமலை தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+