தி.க. தலைவர் கி.வீரமணியின் 82-வது பிறந்தநாள் விழா – 7 ம் தேதி சேலத்தில்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் வருகின்ற 7 ஆம் தேதி திராவிடர் கழக தலைவரான கி.வீரமணியின் 82 ஆவது பிறந்தநாள் விழா நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 82 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள 95 அடி உயர பெரியார் சிலை உள்ளிட்ட சிறப்புகளைக் கொண்ட பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் வரும் 7 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.

K.Veeramani’s 82nd birthday in Salem…

தொடக்க நிகழ்ச்சியில் கருங்குயில் கணேசன், திருத்தணி பன்னீர்செல்வம் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணியளவில் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழியை நடுவராகக் கொண்ட வழக்காடு மன்றம் நடைபெறுகிறது. இதில் க.அன்பழகன், இராம.அன்பழகன் ஆகியோர் பேசுகின்றனர்.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு பிறந்தநாள் விழா நடக்கிறது. சேலம் மாவட்டத் தலைவர் கே.ஜவகர் வரவேற்புரையாற்றுகிறார். மண்டலத்தலைவர் கவிஞர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் வாழ்த்துப்பா கூற, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்கவுரையாற்றுகிறார். துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் மற்றும் மருத்துவர் பிறைநுதல் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

விழாவில் குறுந்தகட்டை வெளியிட்டும், பெரியார் உலகத்திற்காக திரட்டப்பட்ட நிதியை வி.வீரமணி பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+