For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கபாலி லக்கி காயின் போட்ட முத்தூட் நிறுவனத்திற்கு லக் சரியில்லையோ?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கபாலி படம் வெளியானதை முன்னிட்டு தங்கம், வெள்ளி லக்கி நாயணங்களை வெளியிட்ட முத்தூட் நிறுவனத்திற்கு இப்போது நேரம் சரியில்லை போலிருக்கிறது. வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து தற்போது நாடுமுழுவதும் முத்தூட் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கபாலி' படம் ஜூலை 22ம் தேதி வெளியானது. படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் அப்படத்தின் புரோமோஷன்கள் பெரிய அளவில் செய்யப்பட்டன.

Kabali luck fails to Muthoot

தொடக்கத்தில் 'கபாலி'யின் அதிகாரப்பூர்வ ஏர்லைன்ஸ் நிறுவனமாக ஏர் ஏஷியா இணைந்தது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும், 'கபாலி' புரமோஷனுக்காக இணைந்தது. மேலும், வாடிக்கையாளருக்கு புதுப்புது திட்டங்களையும் அந்நிறுவனம் அறிவித்தது. பின்னர் பி.வி.ஆர்.சினிமாஸ் நிறுவனமும் 'கபாலி'யோடு கைகோர்த்தது.

இதனைத் தொடர்ந்து முன்னணி நிதி நிறுவனங்களுள் ஒன்றான 'முத்தூட் பின்கார்ப்' நிறுவனமும் இணைந்தது. இதைத் தொடர்ந்து படத்தை புரமோட் செய்யும் விதமாக 'கபாலி' ரஜினி உருவம் பதித்த தங்க, வெள்ளி நாணயங்களை அந்நிறுவனத்தினர் அச்சிட்டு விற்பனை செய்தனர்.

'கபாலி' ரஜினி உருவம் பொறித்த தங்கம், வெள்ளி நாணயங்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. அந்த நாணயத்துக்கு 'லக்கி சூப்பர்ஸ்டார் காயின்' என்று பெயர் வைத்து விற்பனை செய்தனர் முத்தூட் நிறுவனத்தினர்.

இதன்மூலம் பல ஆயிரக்கணக்கான நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. லக்கி காயின் விற்பனை செய்த நிறுவனத்திற்கு லக் சரியில்லை போல. இப்போது வரி ஏய்ப்பில் சிக்கி சோதனைக்கு ஆளாகியுள்ளது.

English summary
Muthoot firm released silver coin for Kabali but it has failed to pay the tax
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X