கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா – மீனவர்கள் கடலுக்குச் செல்ல தற்காலிக தடை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: கச்சத்தீவில் புனித அந்தோணியார் திருவிழா நடை பெறுவதால் இன்று முதல் 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற 28 ஆம் தேதி மற்றும் மார்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு செல்வதற்காக சுமார் 5 ஆயிரம் பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை ஏற்றி செல்வதற்காக 105 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையொட்டி இன்று 25 ஆம் தேதி முதல் வருகிற 1 ஆம் தேதி வரை 5 நாட்கள் ராமேஸ்வரம் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது என்று மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று திருவிழாவிற்கு பயணிகளை ஏற்றிச் செல்லவிருக்கும் 105 படகுகளையும் மீன்வளத் துறையினர் சோதனை செய்ய உள்ளனர்.












Click it and Unblock the Notifications