கள்ளக்குறிச்சி தெய்வானை.. ஆண் நண்பர் கிட்ட பேசிட்டே இருந்தாரு.. டக்கென "கட்டையை" எடுத்த கணவர்.. ஏன்?
கள்ளக்குறிச்சி: அண்ணன் - தம்பி இருவரையும் கைது செய்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம்?
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது அ.குறும்பூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருகிறார் வீரமணி.. கூலித்தொழிலாளியான இவருக்கு 33 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் தெய்வானை.. 28 வயதாகிறது.

திருமணம்: கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோவிலானூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தெய்வானை.. திருமணமாகி 8 வருடமான நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்..
தம்பதி இருவரும், கேரளாவில் தங்கி கூலி வேலை பாா்த்து வந்திருக்கிறார்கள்.. அப்போது தெய்வானைக்கு, கேரள இளைஞர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தொிகிறது. இந்த விஷயம் தெரிந்ததுமே கொதித்துபோன வீரமணி, தெய்வானையை பலமுறை கண்டித்துள்ளாா். ஆனாலும், தெய்வானை வீரமணி பேச்சை கேட்கவில்லை..
செல்போன்: இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, தம்பதி இருவரும் சொந்த ஊரான அ.குறும்பூர் கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள்.. ஆனால், ஊருக்கு வந்தபிறகும்கூட, அந்த ஆண் நண்பருடன் தெய்வானை செல்போனில் பேசிக் கொண்டேயிருந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த வீரமணி, கீழே கிடந்த கட்டையை எடுத்து தெய்வானையை சரமாாியாக தாக்கியுள்ளாா். இதில் தெய்வானை ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
தெய்வானையின் சடலத்தை கண்டு நடுங்கிய வீரமணி, உடனே தன்னுடைய தம்பி சதீஷை அழைத்து, விஷயத்தை சொல்லி உள்ளார்.. இதைக்கேட்ட சதீஷ், தெய்வானை தூக்குப்போட்டு கொண்டதாக சொல்லி மருத்துவமனையில் சோ்த்து விடுவோம்" என்று ஐடியா தந்தார்..
ஐடியா: அதன்படியே அதன்பிறகு அண்ணன் - தம்பி இருவரும் சோ்ந்து, தெய்வானையின் சடலத்தை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.. தற்கொலை முயற்சியில் தன்னுடைய மனைவி ஈடுபட்டதாக டாக்டா்களிடம் சொன்னார் வீரமணி.. பின்னர் டாக்டர்கள் தெய்வானையை பாிசோதனை செய்தபோதுதான், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது..
அதுமட்டுமல்ல, தெய்வானையை பரிசோதித்தபோது, அவரது உடலில் காயங்கள் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த டாக்டா்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தொிவித்தனா்.
விசாரணை: இதையடுத்து, உளுந்தூா்பேட்டை போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வீரமணி, சதீஷ் இருவரிடமும் விசாரணை நடத்தினா். அப்போதுதான், வீரமணி, தெய்வானையை கட்டையால் அடித்து கொன்றது அம்பலமானது. இறுதியில் வீரமணியையும், உடந்தையாக இருந்த சதீஷையும் போலீசார் கைது விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications