பெண் குழந்தையை பெற்றது என் தவறா? காதலுக்கு கிடைத்த தண்டனை.. தற்கொலை கடிதத்தில் பெண் உருக்கம்
கள்ளக்குறிச்சி: பெண் குழந்தையை கொன்றுவிட கணவர் வீட்டார் நிர்பந்தம் செய்ததை அடுத்து அந்த குழந்தையை காப்பாற்ற தாய் ஒருவர் தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சந்தை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்சா (25). இவர் அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் போது தஸ்தகீருக்கு புல்லட் பைக், 50 பவுன் நகை, ரூ 1 லட்சம் சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. திருமணம் ஆன நாள் முதல் தன் மகனை வளைத்து போட்டு திருமணம் செய்தார் என அவரது பெற்றோர் அப்சாவை கடுமையாக விமர்சித்து வந்ததாக தெரிகிறது.

அப்சா திருமணம்
அப்சாவின் திருமணத்திற்கு போட்ட அனைத்து நகைகளையும் தஸ்தகீரின் பெற்றோர் வாங்கி வைத்து கொண்டனராம். அந்த நகையிலிருந்து 5 பவுன் மதிப்பிலான தங்க வளையலை தஸ்தகீரின் சகோதரி எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இதை அப்சா பார்த்துவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

கடும் தாக்குதல்
அதற்கு தஸ்தகீரின் பெற்றோர் அப்சாவை கடுமையாக தாக்கி தலையில் அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. கணவர் வீட்டாரின் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்ததால் அப்சா 5 முறை தற்கொலைக்கு முயன்று பின்னர் உயிர் பிழைத்திருக்கிறார். இந்த நிலையில் அப்சாவுக்கு இரு மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது.

ஆண் குழந்தை
தங்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்றும் அதனால் இந்த பெண் குழந்தையை கொன்று விடு என்றும் அப்சாவை, தஸ்தகீரின் வீட்டார் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் அப்சா அதற்கு மறுத்ததால் அவரை வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர். இதையடுத்து தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்ற அப்சா, அங்கு தனக்கு நேர்ந்த கொடுமைகளை வீடியோவில் பதிவிட்டார்.

எலி பேஸ்ட்
பின்னர் எலி பேஸ்ட்டை சாப்பிட்டு உயிருக்கு போராடினார். அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்சாவின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார், அவரது செல்போன் வீடியோ பதிவையும் தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர். அந்நத கடிதத்தில் அப்சா கூறியிருப்பதாவது: இந்த உலகம் எவ்வளவு மாறிவிட்டது. இருந்தாலும் பெண் குழந்தைகளை ஏன் வெறுக்கிறார்கள்.

பெண் குழந்தை
பெண் குழந்தையை பெற்றெடுப்பது என்பது என் தவறா. எனது குழந்தையை கொலை செய்ய என்னை வற்புறுத்தியதால் எனக்கு வேறு வழி தெரியமல் நான் இந்த முடிவை எடுக்கிறேன், காதலித்து என் கணவரை திருமணம் செய்த பாவத்துக்கு எனக்கு இதுதான் தண்டனை. மேலும் எனது 50 சவரன் நகைகள், சீர் வரிசை பொருட்கள், திருமணத்திற்கு முன்பு கணவர் வீட்டாருக்கு நான் செய்த ரூ 5 லட்சம் உள்ளிட்டவற்றை ஒன்றுவிடாமல் பெற்று விடுங்கள்.

எதிர்காலம்
அது எனது குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவும். இதுவே பெண் பிள்ளையை பெற்ற தாயின் போராட்டம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அப்சாவி் மாமனார், மாமியார், கணவர், நாத்தனார், கொழுந்தன் என 7 பேர் மீது வரதட்சிணை கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications