மக்களே ஏற்றுக் கொள்ளாத கமலால் எங்களுக்கு பாதிப்பில்லை! - அடங்காத தமிழிசை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களே ஏற்றுக் கொள்ளாத கமல் ஹாஸனால் தமிழக பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜனிடம், கமலின் புதுக்கட்சி அறிவிப்பால் தமிழகத்தில் பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்று கேள்வி எழுப்பினர்.

Kamal already rected by people, says Tamilisai

அதற்கு பதிலளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், "கமல் ஹாஸன் கருத்துக்களை மக்களே ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படிப்பட்ட ஒருவரால் தேசியக் கட்சியான பாஜகவுக்கு என்ன பாதிப்பு வந்துவிடும்?

கமல் ஹாஸனுக்கென்று ஒரு நிலைப்பாடும் இல்லை. ஒரு நாளைக்கு ஒன்று பேசுபவர் அவர். இந்து தீவிரவாதம் பற்றிப் பேசுகிறாரே... கேரளாவில் நடக்கும் சிவப்புத் தீவிரவாதத்தை அவர் எதிர்ப்பாரா? 14 இந்துக்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து அரசியல் கற்கிறார்.

இந்தப் பக்கம் சாரதா சிட் பண்ட் ஊழலில் சிக்கியுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதாவைச் சந்திக்கிறார். இதுதான் அவர் பண்ண விரும்பும் அரசியலா? கமல் ஹாஸன் பற்றி எங்களுக்கு மட்டுமல்ல, யாருக்குமே கவலையில்லை," என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP Tamil Nadu state President Tamilisai Soundarrajan says that BJP never bothers about Kamal Haasan's political entry, because the later has rected by people.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற