கோவையில் மே 11 முதல் கமல்ஹாசன் 3 நாட்கள் சுற்று பயணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் வரும் மே மாதம் 11-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் அப்துல்கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அன்று மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

Kamal conducts general meeting in Coimbatore for 3 days

இதன் முதல் பொதுக் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியில் நடைபெற்றது. இந்த நிலையில் கமல் கோவையில் வரும் மே 11, 12, 13 ஆகிய நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கோவையில் மே 13-இல் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திருச்சி பொதுக் கூட்டத்தில் காவிரி விவகாரத்தை முன்வைத்தார் கமல்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal hassan conducts general meeting in Coimbatore for 3 days from May 11.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற