மக்கள் உயிரைக் காட்டிலும் தாமிர வியாபாரம் முக்கியமா- கமல் கேள்வி

மக்கள் உயிரை காட்டிலும் காப்பர் தொழில் தேவையா என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: மக்கள் உயிரை காட்டிலும் காப்பர் தொழில் தேவையா என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் , குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைக்காக அவர்கள் கடந்த 49 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Kamal hassan asks Copper business is imporant than people lives?

இந்த போராட்டத்தில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் என் பங்கேற்பு விளம்பரத்துக்காக அல்ல. 5 வயது குழந்தையாக இருக்கும் போதே என்னை தமிழக அரசு தூக்கிவைத்து கொண்டாடினர்.

ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும். மக்களுக்காக உழைப்பதை காட்டிலும் பெரிய ஏற்றம் வேறு இல்லை. திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் காவிரி குறித்து முடிவு செய்யப்படும்.

Kamal hassan asks Copper business is imporant than people lives?

மக்களின் உயிரை விட தாமிர வியாபாரம் முக்கியமாக போய்விட்டதா. ஸ்டெர்லைட் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பாராமுகமாக நடந்து கொள்கின்றன.

தாமிர ஆலை வேண்டுமெனில் குடியிருப்பு பகுதியில் வைக்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலையில் தற்போது ஆய்வு நடத்துவதால் எந்த பயனும் இல்லை. முதலில் ஸ்டெர்லைட் ஆலை வைக்கப்பட்டுள்ள இடம் சிப்காட் பகுதியில் வருகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று கமல் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+