டிவிட்டரில் பொங்கல் வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்.. அதிலும் ஒரு அரசியல் பஞ்ச்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொங்கல் வாழ்த்துக்களை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் பொங்கல் வாழ்த்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். "அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு"

Kamal Hassan greets for Pongal

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இனி விதைப்பது நற்பயிராகட்டும் என கூறியுள்ளதன் மூலம், அவர் மறைமுகமாக அரசியல் குறித்து கருத்து கூறியதாக தெரிகிறது. மேலும், இதுவரை அரசியலில் விதைத்தது நல்ல பயிர் இல்லை என மீண்டும் அவர் சாடியுள்ளார் என பார்க்கப்படுகிறது.

ஜனவரி 7ம் தேதி "கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது. விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்கு தயவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்க பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன" என்று ஒரு டிவிட் வெளியிட்டார்.

இதன்பிறகு சுமார் ஒரு வார இடைவெளிக்கு பிறகு இப்போது டிவிட்டரில் அவர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal Hassan express Pongal greetings in Twitter. Kamal is also involved politics in his greeting.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X