புதிய சுதந்திர போராட்டத்துக்கு துணிச்சல் உள்ளவர்கள் வாரும்... கமல்ஹாசன்
புதிய சுதந்திர போராட்டத்துக்கு சூளுரைக்க துணிவு உள்ளவர்கள் வாருங்கள் என்று கமல் மற்றொரு டுவீட்டில் அழைப்பு விடுத்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாதவரை நாம் இன்னும் அடிமைகளே; புதிய சுதந்திர போராட்டத்துக்கு சூளுரைக்க துணிவு உள்ளவர்கள் வாருங்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
சுதந்திர தினத்தன்று முதல் இரு டுவிட்டுகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரடியாக கமல் விமர்சித்தார். அந்த வகையில் அவர் அடுத்த டுவீட்டுகளையும் வெளியிட்டுள்ளார்.

அதில் ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாதவரை நாம் அடிமைகளே. புதிய சுதந்திர போராட்டத்துக்கு சூளுரைக்க துணிவு உள்ளவர்கள் வாருங்கள், வெல்வோம் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்
— Kamal Haasan (@ikamalhaasan) August 15, 2017


Click it and Unblock the Notifications
