நல்லதை சரியானவர்களுக்கு செய்வதே அரசியல்- கமல் #kh

Posted By:
Subscribe to Oneindia Tamil
  Kamal Speech about his political move-Oneindia Tamil

  சென்னை: நல்லதை செய்ய வேண்டும் , ஆனால் அதை சரியானவர்களுக்கு செய்ய வேண்டும், அதுதான் அரசியல் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

  இன்று கமலஹாசனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி சென்னை தி.நகரில் நற்பணி இயக்கம் சார்பில் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

  Kamal hassan says that good things will be given to right persons

  இதில் கமல் பேசுகையில், முதலில் தாமதமாக வந்ததற்கு மன்னித்து விடுங்கள். இன்று அறிமுகப்படுத்துவது செயலி அல்ல. செயலி என்றும் கூறலாம். ஆனால் பொது அரங்கம் என்று கூறுவதே சரியாகும்.

  நல்லது செய்வதையும் பண்பறிந்து செய்ய வேண்டும். நல்லதை சரியான மக்களுக்கு செய்ய வேண்டும், அதுதான் அரசியல். நல்லது செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  உண்மையை மட்டுமே பேசுவது என்பது எல்லோராலும் முடியாது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். நல்ல தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது கனவு ஆகும் என்றார் கமல் ஹாசன் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Kamal Hassan said that Good things will be done to right persons, that is politics.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற