For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டம் கூட்டமாக அரசியலில் குதிக்கும் நடிகர்கள்.. அடுத்து குதிக்கப் போவது யாரு!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    திடீரென அரசியலில் குதிக்கும் நடிகர்கள்...அடுத்தது யார்?- வீடியோ

    சென்னை: கமல், விஷால், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகியோர் கட்சியை தொடங்கிவிட்ட நிலையில் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, சித்தார்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் எப்போது கட்சியை தொடங்குவர் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    அரசியல் கட்சி தொடங்குவது என்றால் மக்கள் பணியாற்றிவிட்டு பல்வேறு போராட்டங்களுக்காக சிறைக்கு செல்வது , தனக்கென தொண்டர்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டு பிறகு கட்சியை ஆரம்பிப்பது ஆகும்.

    தேர்தல் பிரசாரத்தின் போது தான் இதை செய்தேன், அதை செய்தேன் என பட்டியலிடுவதற்கு வசதியாக நலத்திட்டம், தண்ணீர் பந்தல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவது வழக்கம்.

    மக்களுக்கு நல்லது

    மக்களுக்கு நல்லது

    ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருந்து விட்டால் போதும். உடனே கட்சியை தொடங்கிவிடுகின்றனர் நடிகர்கள். இதில் சிலர் இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு நல்லது செய்துவிட்டும் அரசியலுக்கு வருகின்றனர்.

    ரஜினி

    ரஜினி

    அந்த வகையில் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இவர் ஒரு செயலியையும் உருவாக்கி அதன் மூலம் மக்கள் தரும் புகாரை தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்கிறார். ரஜினிகாந்தோ அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னார். ஆனால் அவர் செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் கட்சியை தொடங்குவார் என்று தெரிகிறது.

    கட்சி தொடக்கம்

    கட்சி தொடக்கம்

    ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கூறி போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விஷால் திடீர் காப்பி, டீ போல் ஒரு இயக்கத்தை உருவாக்கிவிட்டார். 99 சதவீதம் விஜய்யின் மக்கள் இயக்கத்தை அப்படியே காப்பி அடித்து தொடங்கிவிட்டார். பாஸ் என்கிற பாஸ்கரனும் இன்று அரசியல் கட்சியை தொடங்குகிறார்.

    இயக்கம்

    இயக்கம்

    விஜய், சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோரும் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இவர்களில் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். சிம்புவோ இன்னும் எந்த இயக்கத்தையும் தொடங்கவில்லை. ஆனால் அவரது தந்தை டி.ராஜேந்தரோ என் மகன் அரசியலுக்கு வருகிறேன் என்றால் அவர் பின்னால் தமிழகமே நிற்கும் என்று கூறியுள்ளார்.

    ஏராளம்

    ஏராளம்

    அதுபோல் விஜய் சேதுபதி, ஜி.வி. பிரகாஷ், சித்தார்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அவ்வபோது டுவிட்டரில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எனவே இவர்களும் அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கொடி

    கொடி

    அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம். ஆனால் சினிமாவில் மக்கள் மனதை கொள்ளை கொண்ட இவர்கள் அரசியலிலும் சாதிப்பார்களா என்பது போக போகத்தான் தெரியும். போகிற போக்கை பார்த்தால் வீதிக்கு ஒரு கட்சி வீட்டுக்கு ஒரு கொடி என்ற நிலைமை ஆகிவிடும் போல!.

    English summary
    Kamal, Rajini and Vishal in Politics. Next who will come to politics? Simbu and Vijay fans are looking forward for their announcement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X