வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை... பகுத்துமறிவோம் பக்தியும் புரிவோம் - கமல் ட்வீட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பகுத்துமறிவோம் பக்தியும் புரிவோம். தமிழ்க்கோவலர் வாழும் கோவில் தமிழ்நாடு வணங்குதல் நலம் என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல் கடந்த சில மாதங்களாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் ரீதியாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்தக்கூடாது.

Kamal Tweets brave and Ahimsa

சட்டம் ஒழுங்கு சீர் குலையும் வகையில் ஆர்பாட்டம் நடத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதுகுறித்து நடிகர் கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நீதிமன்றத்தை அவமதிக்க கூடாது, நீதிமன்ற உத்தரவை மீற கூடாது. நீதித்துறையை சரியாக பயன்படுத்துவோம். நம்மால் முடியும். அரசியலமைப்புக்கு உட்பட்டு எல்லாத்தையும் விவாதிக்க முடியும் என்று பதிவிட்டார்.

நீட் தேர்வு பற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசினார் கமல். இது பேசவேண்டிய இடம்தான் என்று கூறினார். கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், வீரத்தின் உச்சகட்டம் அஹிம்ஸை.அதன் விதை பயமிலாக் கேள்வி. பகுத்துமறிவோம் பக்தியும் புரிவோம். தமிழ்க்கோவலர் வாழும் கோவில் தமிழ்நாடு வணங்குதல் நலம்" என்று ட்வீட் செய்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal post his twitter page,brave and Ahimsa, pray for TamilNadu.
Please Wait while comments are loading...