இலக்கிய நடையை விட்டு திடீர்னு டவுன் டூ எர்த் ஸ்டைலுக்கு மாறிய கமல்!
சென்னை: கமல்ஹாசனின் டிவிட்டர் பதிவுகளில் உள்ள அர்த்தம் என்ன என்று புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கும். ஆனால் இன்றைய அறிக்கையில் இலக்கிய நடையை விட்டுவிட்டு சாதாரண மொழி நடையில் அமைந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு ஆதரவு
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முதல் ஆளாக வந்து ஆதரவு தெரிவித்ததோடு, கலவரத்தின் போது நடத்தப்பட்ட தடியடிக்கும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதே போன்ற ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டதையும் கமல் விமர்சித்திருந்தார்.

அரசியலும் கமலும்
இதுவரை அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விகளுக்கு கமல்ஹாசன் வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் சமீபத்தில் அவரது கருத்துக்கள் அரசியல் சார்ந்தவையாகவே உள்ளது. அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் இருப்பதாக சுட்டிக் காட்டினார். அதற்கு ஆளும் கட்சித் தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

புரியாத கவிதை
கமலின் டிவிட்டர் பதிவுகள் எப்போதும் பரபரப்பை கிளப்பும். ஆனால் அவரது பதிவுகள் பெரும்பாலானவை கவிதை வடிவில் இருபக்கும். சாமானியர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கடுமையான தமிழ் நடை, புரியாத வாக்கியங்கள், சமயத்தில் கடும் எழுத்துப் பிழைகளுடன் வருகின்றன. நேற்றைக்கு கமலின் டுவிட்டர் பதிவால் அவரது ரசிகர்கள் உள்பட அனைவரும் அதன் அர்த்தம் என்ன என்று புரிந்துகொள்ள முடியாமல் திணறினர்.

சாதரண தமிழுக்கு மாறிய கமல்
இன்றைக்கு கமல் கூறியுள்ள கருத்துக்கள் இலக்கிய நடை இல்லாமல் சாதராண மொழி நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக அமைந்துள்ளது. அவரது அறிக்கையில், "ஊழலே இல்லா நிரூபி பாப்போம்னு அமைச்சர் கேட்டார்ல.? ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க. கார்டு, கவர்ல, கடுதாசில வேணாம். கிழிச்சிப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க. டிஜிட்டல் யுகம் இது. டிஜிட்டலா பதிவு செய்ங்க. ஆனா மரியாத தவறாம அதச் செய்ங்க." கமலின் அறிக்கை பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications