கன்னியாகுமரியில் மழையால் நிரம்பிய குளங்கள் - சுவர் இடிந்து 2 பேர் காயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கனமழை காரணமாக அப்பகுதி குளங்கள் நிரம்பி வழிகின்றன.

கன்னியாகுமரி: வடகிழக்குப் பருவமழை குமரி மாவாட்டத்தில் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலையில் மழை பெருக்கெடுத்துள்ளது.

Kanyakumari many pools getting more water from #Rain

தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தின் குளங்கள் நிரம்பி வருகின்றன. இதுவரை 198 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.

420 குளங்கள் 75 சதவீதமும், 596 குளங்கள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன. இதனால் அப்பகுதியில் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல் ஆற்றின்கரையில் பெய்த கனமழையில் அருள்தாஸ் என்பவர் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஸ்ரீராம்,10 சந்தோஷ்,9 என்ற இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் காயம் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kanyakumari many pools getting more water from Rain.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற