அண்ணாமலையின் 100 வருட காரைக்குடி அதிசயம்! ரூ.33,000 பட்ஜெட்டில் மாறிய 1 ஏக்கர் சிதம்பர விலாஸ் வீடு

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: உலகப்புகழ் பெற்ற செட்டிநாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் காரைக்குடி, மண்ணின் பெருமையைப் பறைசாற்றும் உன்னதமான கட்டடக்கலைக்கு என்றும் பெயர் பெற்றதாகும். காலத்தைக் கடந்து கம்பீரமாக நிற்கும் கலைநயமிக்க கட்டுமானங்களும் தமிழர்களின் வாழ்வியல் நெறிகளையும் கூட்டுக்குடும்பப் பண்பாட்டையும் உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன. அத்தகைய பெருமைமிகு மண்ணில், தொன்மையும் அழகும் நிறைந்த ஒரு வியத்தகு வரலாற்று பின்னணி, இப்போது சோஷியல் மீடியாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்படி என்ன நடந்தது?

காரைக்குடி வீடுகள் அதாவது செட்டிநாடு வீடுகள் என்றாலே அவற்றின் பிரம்மாண்டமான கட்டடக்கலை மற்றும் தனித்துவமான பாரம்பரியம்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும், அந்த அளவுக்கு காரைக்குடி வீடுகள் உலகளவில் புகழ்பெற்றவை.

karaikudi heritage chidambara vilas chettinad architecture tamil nadu history budget mansion story 100 year old house 100

பர்மா தேக்கு மரத்தூண்கள், இத்தாலி பளிங்குக்கற்கள், பெல்ஜியம் கண்ணாடிகள் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து மெருகூட்டப்பட்ட ஆத்தங்குடி தரை Tiles போன்ற உயர்தரப் பொருட்களைக் கொண்டு இந்த வீடுகள் கலைநயத்துடன் கட்டப்படுகின்றன.

காரைக்குடி 100 வருட வீடு அதிசயம்

"திண்ணை" முதல் "முற்றம்" வரை காற்றோட்டமும் வெளிச்சமும் தாராளமாக உள்ளே வரும் வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட இந்த வீடுகள், கூட்டுக்குடும்ப வாழ்க்கையையும் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றக்கூடியவை.

அதுமட்டுமல்ல, கோடைகாலத்தில் குளுமையாகவும், குளிர்காலத்தில் இதமாகவும் இருக்கும்படி கட்டப்பட்டுள்ள இந்த வீடுகள், காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு கட்டிடக்கலை அதிசயமாய் விளங்குவதால்தான் இன்றும் தனிச்சிறப்பாகக் கருதப்படுகின்றன. இந்த பிரம்மாண்ட பாரம்பரியத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில், காரைக்குடி அருகே கோட்டையூரில் மற்றொரு சிறப்பம்சம் நடந்துள்ளது,

சிவகங்கை மாவட்டம், கோட்டையூர் பி.எம்.ஏ. வீதியில் சிதம்பர விலாஸ் என்ற வீடு அமைந்துள்ளது.. கடந்த 1924-ம் ஆண்டு அண்ணாமலை என்பவரால், அன்றைய காலகட்டத்தில் வெறும் 33,000 ரூபாய் செலவில் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில், பிரமிக்க வைக்கும் அரிய வேலைப்பாடுகளுடன், பார்ப்பதற்கு அப்படியே ஒரு சொகுசு அரண்மனை போல இந்த வீடு தோற்றமளிக்கிறது.

சிவகங்கை காரைக்குடி வீடுகள்

தலைமுறைகள் கடந்தும் தங்களது பாரம்பரிய அடையாளத்தை மாறாமல் பாதுகாத்து வரும் இந்த "சிதம்பர விலாஸ்" வீட்டை, இப்போது அண்ணாமலையின் ஐந்தாவது தலைமுறையினர் மிகவும் பெருமையோடு பராமரித்து வருகிறார்கள். இந்த நிலையில், நூற்றாண்டு விழா காண்பதையொட்டி இந்த பிரம்மாண்ட வீட்டில் சமீபத்தில் சில முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே சுமார் 20 லட்சம் ரூபாய் வரை செலவானதாக அந்த குடும்பத்தினர் நெற்வழியாகத் தெரிவித்துள்ளனர்.. 33000 ஆயிரம் ரூபாய் வீட்டுக்கு, 20 லட்சம் செலவுதான் இப்போது ஒட்டுமொத்தப் பகுதியின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காரைக்குடி பிரம்மாண்ட பங்களாக்கள்

காலம் கடந்தும் தங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, தங்களது குடும்ப பெருமையைப் பறைசாற்றும் இந்த பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வீட்டைத் தங்களுக்கு வாரிசாக வழங்கிய தங்களது பூட்டனான அண்ணாமலைக்கும், அந்த காலத்தில் இந்த கலைநயமிக்க கட்டடத்தை இழைத்து இழைத்து கட்டிய கூலித் தொழிலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி செலுத்துவதையே தங்களின் கடமையாக கருதுகிறார்கள்.

இதற்காகவே இந்த ஐந்தாவது தலைமுறை குடும்பத்தார்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தங்களது அன்பான வீட்டிற்கு முறைப்படி 'நூற்றாண்டு விழா' எடுத்து ஒட்டுமொத்த ஊரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

கோட்டையூர் அண்ணாமலை வீடு

இந்த வீட்டின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாகவும், ஆன்மீக மணம் கமழும்படியும் நேற்று நடந்துள்ளது. இந்த விழாவில் ஓசூர், முக்தாபாய் பஜனை மண்டலி அறக்கட்டளையைச் சேர்ந்த ஸ்ரீபிரியா குமார் குழுவினரின் பக்திமயமான பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாரசியமான பட்டிமன்றம், கண்கவர் கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி பரவசமூட்டும் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் வீதி உலா போன்றவை வெகு சிறப்பாக நடைபெற்றன.

நேற்றிரவு சிறப்பு பூஜைகள், மனதை ஒருமுகப்படுத்தும் தியானம் மற்றும் திவ்ய நாம சங்கீர்த்தனம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீகக் கொண்டாட்டங்களுடன் இந்த வீட்டிற்கான நூற்றாண்டு விழா மிக பிரம்மாண்டமாக களைகட்டியது. ஒரு வீட்டிற்கு நூற்றாண்டு விழா எடுத்து, அதற்குக் காரணமான தொழிலாளர்களை நினைவுகூர்ந்த இந்த செட்டிநாட்டு குடும்பத்தின் செயல் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+