கவரிங் நகைகளை தங்க நகைகள் என ஏமாற்றி விற்ற இளைஞர்கள் கைது: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: சத்தியமங்கலம் அருகேயுள்ள கெஞ்சனூரில், மளிகை கடை நடத்தி வருபவரிடம் கவரிங் நகையை தங்க நகை என ஏமாற்றி விற்பனை செய்ய முயன்ற இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சத்தியமங்கலம் அருகேயுள்ள கெஞ்சனூரில் மளிகை கடை நடத்தி வருபவர் பொன்ராஜ். அவரிடம் கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வந்து 4 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் 170 சவரன் நகை கொடுப்பதாகக் கூறியுள்ளனர்.

Karnataka youngsters cheated Sathiyamangalam grocery shop owner

பொன்ராஜும் இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள். பணம் தருகிறேன் என கூறியுள்ளார். அதேபோல் இரண்டு நாட்கள் கழித்து வந்த அவர்களிடம் பொன்ராஜ் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த இளைஞர்கள் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

அதைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், விசாரணையில் கவரிங் நகைகளை தங்க நகைகள் என கூறி அவர்கள் பலரிடம் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near Sathiyamangalam, 2 youngsters tried to cheat Ponraj, grocery shop owner by selling covering jewels as gold. And police arrest the cheats
Please Wait while comments are loading...