For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர்களை அடையாளம் காட்டியதே சின்னம்மாதான், ஒதுக்கி வச்சா எப்படி.. கருணாஸ்

சசிகலாதான் இரண்டு முதல்வர்களையும் அடையாளம் காட்டினார் என்றும், சசிகலா, தினகரனை ஒதுக்கி வைக்கக்கூடாது என்று கருணாஸ் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: எம்எல்ஏக்கள் அனைவரும் சசிகலா முன்பாக ஜெயலலிதா படத்தில் சத்தியம் செய்தனர் என்று கருணாஸ் என்றும், சசிகலா, தினகரனை ஒதுக்கி வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.

அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர், டிடிவி தினகரன் தனி அணியாக செயல்படுகிறார். இதில் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோரும் தனியாக உள்ளனர்.

சசிகலாவுக்கு ஆதரவு

சசிகலாவுக்கு ஆதரவு

யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி இவர்கள் மூவரும் ஆலோசனை நடத்தி இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், சசிகலா மூலமாக தான் எம்.எல்.ஏ வாய்ப்பு எனக்கு கிடைத்தது டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களையும் எடப்பாடி அழைத்து பேச வேண்டும் என்றார்.

அடையாளம் காட்டிய சசிகலா

அடையாளம் காட்டிய சசிகலா

இரண்டு முதல்வர்களையும் அடையாளர் காட்டியவர் சசிகலாதான். ஜெயலலிதாவின் படத்தின் மீது சத்தியம் செய்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களித்தனர்

ஒதுக்க கூடாது

ஒதுக்க கூடாது

சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைத்து விட்டு ஆட்சி நடத்த கூடாது. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர் சசிகலா என்றும் கருணாஸ் கூறினார்.

பாஜக சூழ்ச்சி

பாஜக சூழ்ச்சி

பாஜக சூழ்ச்சிக்கு அதிமுக பலியாகி விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குலக்கல்வியை செயல்படுத்தப் போவதாக தகவல் வந்துள்ளது என்று கருணாஸ் தெரிவித்துள்ளார். தோழமைக் கட்சியின் விவகாரத்தில் தலையிடுவது அநாகரிகமான செயல்.

பின்விளைவுகள்

பின்விளைவுகள்

10 எம்எல்ஏக்களை அழைத்து மரியாதை செய்தது அரசு. அதேபோல 20 எம்எல்ஏக்களை வைத்துள்ள தினகரனை அழைத்து பேசத் தயங்குவது ஏன்?. 33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடனே இருந்த சசிலாவை நீக்குவது பின் விளைவுகளை ஏற்படுத்தும். சசிகலா வேண்டுகோளை ஏற்று தான் இந்த அரசுக்கு ஆதரவளித்தோம் என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.

English summary
Actor and MLA Karunaas has opposed the removal of Sasikala and Dinakaran from ADMK posts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X