நல்ல உடல்நிலையில் கருணாநிதி.. காவேரி மருத்துவமனை முன் உற்சாகத்தில் தொண்டர்கள்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதால் திமுக தொண்டர்கள் உற்சாக மிகுதியில் இருக்கிறார்கள்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதால் திமுக தொண்டர்கள் உற்சாக மிகுதியில் இருக்கிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.நேற்று இரவில் இருந்து அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது காவிரி மருத்துவமனை, கருணாநிதி உடல் நலம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு மருத்துவ உபகரண உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஐசியூவில் இருக்கும் சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கருணாநிதி நலமுடன் இருப்பதால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். திமுக தொண்டர்கள் இப்படி ஒரு அறிக்கைக்குத்தான் காத்து இருந்தார்கள் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு காவேரி மருத்துவமனை அறிக்கையை அடுத்து உற்சாகம் அடைந்துள்ளனர்.
காவேரி மருத்துவமனை முன் உற்சாகத்தில் கோஷம் எழுப்பினர். நேற்று இரவில் இருந்து அங்கு நிரம்பி இருந்த தொண்டர்கள் சேர்ந்து கருணாநிதிக்காக சந்தோச கோஷம் எழுப்பினார்கள். முதியவர்கள், பெண்கள் என்று எல்லோரும் சேர்ந்து இந்த அறிக்கை குறித்த சந்தோச கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications