For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்டவரே என்று அழைத்த கருணாநிதியையே எதிர்த்து நின்ற எம்.ஜி.ஆர்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவை பற்றிய சில தகவல்கள் இதோ உங்களுக்காக.

By Rajeswari
Google Oneindia Tamil News

சென்னை: திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள்
முதல்வருமான மு.கருணாநிதிக்கும்,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கும் இருந்த
உறவை பற்றிய சில தகவல்கள் இதோ உங்களுக்காக.

முதல் முதலில் எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம்
மாடர்ன் தியேட்டரில் தான்.

Karunanidhi, MGR - interesting facts

கருணாநிதி எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி, மலைக்கள்ளன் போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதற்கிடையே நல்ல நண்பர்களாக இருவரும் வலம்
வந்தனர்.எம்.ஜி.ஆர் வீட்டிற்கு கருணாநிதியும் கருணாநிதி வீட்டிற்கு எம்.ஜி.ஆரும் சென்று வந்தனர். நெருங்கிய நண்பர்களாக இருந்த அவர்கள்
அவரவர் துறையில் சிறந்து விளங்கினார்கள்.

அந்த சமயங்களில் தான் எம்.ஜி.ஆர் கருணாநிதியுடன் இணைந்து திமுக கட்சி பணியிலும் ஈடுபட்டார், அவரிடம் இருந்து அரசியலையும் கற்று கொண்டார்.

1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - அதிமுக என்று மாறியதாம்.ஆம்,
எம்.ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்கி, தனது நீண்டகால ஆருயிர் நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார். எம்.ஜி.ஆருக்கு மக்கள்
ஆதரவு அலை கடுமையாக வீசியது. அந்த அலையிலும் கட்டுமரமாய் நீந்தி வந்து வென்றார் கருணாநிதி.

அதுவரை நண்பர்களாக இருந்த இருவரும் எதிர் எதிர் அணிகளாக மாறி பல போட்டிகளை சந்தித்தனர். இருப்பினும் இருவரும் தனி பலம் வாய்ந்த சகாப்தம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

English summary
Above is the interesting information about friends turned foes Karunanidhi and MGR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X