For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தி.மு.க. தலைவராக 11வது முறையாக கருணாநிதி தேர்வு! பொதுச்செயலராக அன்பழகன், பொருளாளராக ஸ்டாலின் தேர்வு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க.வின் தலைவராக 11வது முறையாக கருணாநிதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் தி.மு.க. பொதுச்செயலராக க. அன்பழகன், பொருளாளராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தி.மு.க.வின் 14-ஆவது உள்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. 65 மாவட்டங்களில் 60 மாவட்டங்களுக்கான செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Karunanidhi, Stalin reelected for another term in DMK

இந்த நிலையில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பொதுக் குழு இன்று காலை 9 மணிக்கு கூடியது.

Karunanidhi, Stalin reelected for another term in DMK

தலைவர் பதவிக்கு கருணாநிதியையும், பொதுச்செயலாளர் பதவிக்கு க.அன்பழகனையும், பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலினையும் தேர்ந்தெடுக்கும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் 60 வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

Karunanidhi, Stalin reelected for another term in DMK

இந்தப் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் 3 பேரும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க. தலைவராக 11வது முறையாக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கருணாநிதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது மு.க.ஸ்டாலின் உட்பட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்து முழக்கமிட்டனர்.

English summary
The DMK's top three president M. Karunanidhi, general secretary K. Anbazhagan and treasurer MK Stalin were re-elected in Party's general council meet on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X