For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலைஞர் கருணாநிதி .. செல்வி ஜெ. ஜெயலலிதா.. பேஸ்புக்கில் ஒரு 'பேஸ் ஆஃப்'!

Google Oneindia Tamil News

சென்னை: இது பேஸ்புக் காலம்.. எதாக இருந்தாலும் பேஸ் டூ பேஸ் பார்ப்பதற்குப் பதில் பேஸ்புக் டூ பேஸ்புக் பார்ப்பது சம்பிரதாயமாகி விட்டது... புருஷன் பொண்டாட்டியும் கூட இப்போது பேஸ்புக்கிலேயே குடும்பம் நடத்தும் அளவுக்கு நிலைமை.. பேஸ்புக்கில் இல்லாவிட்டால் ரொம்பக் கேவலமாக வேறு பார்க்கிறார்கள்.

அரசியல்வாதிகளும் இதற்கு விதி விலக்கல்ல. போட்டி போட்டுக் கொண்டு பேஸ்புக்கில் குடியேறி வருகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைவர் கருணாநிதிதான் பேஸ்புக்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பேஸ்புக்கில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் லேட்டஸ்டாக பேஸ்புக்கில் பிரபலமாகியுள்ளார் செல்வி ஜெ. ஜெயலலிதா.. நம்ம முதல்வர்தாங்க.

செல்வி ஜெ. ஜெயலலிதா

செல்வி ஜெ. ஜெயலலிதா

ஜெயலலிதா பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம் தற்போது பிரபலமாகி வருகிறது. செல்வி ஜெ. ஜெயலலிதா என்ற பெயரில் இந்த பேஸ்புக் பக்கம் உள்ளது.

அதிகாரப்பூர்வமானதா..

அதிகாரப்பூர்வமானதா..

இது முதல்வரின் அதிகாரப்பூர்வ பக்கமா என்பது தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமான பக்கம் போலவே இது காணப்படுகிறது.

புகைப்படம், பிரஸ் ரிலீஸ்.. சுடச் சுட

புகைப்படம், பிரஸ் ரிலீஸ்.. சுடச் சுட

முதல்வர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், புகைப்படங்கள், அவர் வெளியிடும் அறிக்கைகள் சுடச் சுட இங்கு வெளியாகி விடுகின்றன.

கவர் போட்டோவில் மெட்ரோ ரயில்

கவர் போட்டோவில் மெட்ரோ ரயில்

செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பேஸ்புக் பக்கத்தின் கவர் புகைப்படமாக சமீபத்தி்ல அவர் தொடங்கி வைத்த மெட்ரோ ரயிலின் படம் இடம் பெற்றுள்ளது சுவாரஸ்யமானது.

12,532 லைக்குகள்

12,532 லைக்குகள்

இந்த பக்கத்தை இதுவரை 12,532 பேர் லைக் செய்துள்ளனர்.

கருணாநிதியை விட கம்மிதான்

கருணாநிதியை விட கம்மிதான்

அதேசமயம், திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ் புக் பக்கத்தை இதுவரை 69,213 பேர் லைக் செய்துள்ளனர்.

விமர்சித்தாலும் அனுமதிக்கும் கருணாநிதி

விமர்சித்தாலும் அனுமதிக்கும் கருணாநிதி

கருணாநிதியின் பக்கம் படு பிசியாகவும், சூடாகவும் காணப்படுகிறது. கருணாநிதியை விமர்சித்து வெளியிடப்படும் கருத்துக்களையும் கூட எடிட் செய்யாமல் அப்படியே அனுமதிக்கிறார்கள் என்பதுதான் இதில் விசேஷமானது.

இரு பெரும் பேஸ்புக் பேஸ் ஆஃப்

இரு பெரும் பேஸ்புக் பேஸ் ஆஃப்

தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களின் பேஸ் புக் பக்கங்கள் தேர்தல் நெருங்க நெருங்க மேலும் சூடு பிடிக்கலாம் என்று நம்புவோம்.

English summary
After DMK chief Karunanidhi, its now CM Jayalalitha, who is making waves in Facebook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X