For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடி கொண்டே போகும் கிரைம் ரேட்.. கட்டம் கட்டப்படும் கருணாஸ்... யாரை கண்டு அஞ்சுகிறது அரசு?

Google Oneindia Tamil News

Recommended Video

    கூடி கொண்டே போகும் கிரைம் ரேட்.. யாரை கண்டு அஞ்சுகிறது அரசு?- வீடியோ

    சென்னை: புலித்தேவன் பிறந்தநாளில் தாக்குதல் நடத்தியதாக மேலும் ஒரு வழக்கு கருணாஸுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அதிமுக அரசு கட்டம் கட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கருணாஸ் கடந்த மாதம் முக்குலத்தோர் புலிகள் படை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

    இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி சந்தித்து பேசினார்.

    [ தலைவன் சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும்.. சரமாரியாக விளாசிய விஜய் ]

    சிகிச்சை

    சிகிச்சை

    இந்த நிலையில் அவர் மீது வழக்கிற்காக நெல்லையில் இருந்து போலீஸார் இன்று சென்னையில் உள்ள கருணாஸ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர். இந்நிலையில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கருணாஸ் மிரட்டல்

    கருணாஸ் மிரட்டல்

    கூவத்தூர் விவகாரத்தில் அரசை மிரட்டுவதாலேயே அவர் வழக்கு மீது வழக்காக சந்தித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. கருணாஸ் கடந்த மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்த கருணாஸ் இல்லாமல் இந்த அரசாங்கம் அமைந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் கூவத்தூரில் நடந்தது என்ன என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பேன் என்றும் கருணாஸ் அதிமுக அரசின் வயிற்றிலி புளியை கரைத்துள்ளார்.

    கருணாஸ் ஆதாரம்

    கருணாஸ் ஆதாரம்

    கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் மற்றும் தங்கம் வழங்கப்பட்டதாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்திருந்தது. எனவே இது தொடர்பான ஏதேனும் ஆதாரங்களை கருணாஸ் வைத்துள்ளாரா என்று தெரியவில்லை.

    கோபம்

    கோபம்

    அதிமுகவை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கட்டி காத்திருந்தாலும் அதன் முக்கிய முடிவுகளை சசிகலா குடும்பத்தினரே எடுத்திருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனவே அதிமுகவை எப்படியாயினும் கைப்பற்ற நினைக்கும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கருணாஸை சந்தித்ததும் அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

    பதவி பறிக்கும் திட்டம்

    பதவி பறிக்கும் திட்டம்

    மேலும் தினகரன், கருணாஸுடன் இணைந்து அரசியல் செய்வதை தங்களுக்கு எதிராகவே அதிமுக அரசு கருதுகிறது. இதனால் தினகரனை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் கருணாஸின் கிரைம் ரேட்டை கூட்டிக் கொண்டே அவருக்கு குடைச்சலை கொடுப்பதுதான் அதிமுக வகுத்துள்ள அதிரடி திட்டம் என்று கூறப்படுகிறது. மேலும் அவரது எம்எல்ஏ பதவியை எப்படியாவது பறிக்கும் திட்டத்தையும் வகுத்துள்ளது.

    English summary
    MLA Karunas is being targeted by ADMK government. Today also Nellai Police reaches Chennai in search of him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X