இரண்டு ''யூத்''துகள் சந்தித்துக் கொண்ட தருணம்... கரூரில் திமுக- காங்கிரஸ் வேட்பாளர்களின் ''கலகலப்பு'
கரூர்: வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த திமுக வேட்பாளர் சின்னச்சாமியும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.
இரு துருவங்களாக போட்டியிடும் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் பேசிக் கொண்ட அந்த சந்தர்ப்பம் சுவாரஸ்யமானதாக இருந்தது.
இரு வேட்பாளர்களும் நேற்று மனுதாக்கல் செய்தனர். அடுத்தடுத்து மனுத் தாக்கல் செய்தனர். பின்னர் வெளியே வந்தபோது சந்தித்துக் கொண்டனர்.
அந்த சந்திப்பின்போது நடந்த சுவாரஸ்யம் இதோ:
காங்கிரஸ் ஜோதிமணி:
கரூர் லோக்சபா தொகுதி காங்., வேட்பாளர் ஜோதிமணி, நேற்று மதியம், 1 மணிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அறையில் வேட்புமனுத்தாக்கல் செய்து கொண்டிருந்தார்.
திமுக சின்னச்சாமி:
அப்போது, வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த தி.மு.க., வேட்பாளர் சின்னசாமி, கலெக்டர் அறைக்கு அருகில் மற்றொரு அறையில் காத்திருந்தார்.
நல்லா இருக்கீங்களா?:
அப்போது, வேட்புமனுத்தாக்கல் செய்து விட்டு, கலெக்டர் அறையில் இருந்து வெளியே வந்த வேட்பாளர் ஜோதிமணி, சின்னசாமியை சந்தித்து நலம் விசாரித்தார்.
"இளைஞர்களுக்கு வழி விடலாமே":
அவரிடம் ஜோதிமணி, "இளைஞர்களுக்கு நீங்கள் வழிவிட்டு என்னை ஆதரிக்க வேண்டும்'' என்று சிரித்தபடி கோரிக்கை வைத்தார்.
"நீதான் என்னை ஆதரிக்கனும்":
உடனே சின்னச்சாமி, "நானும் இளைஞர்தான். அதனால், நீயும் என்னை ஆதரிக்க வேண்டும்'' என்று அதிரடியாக பதிலளித்தார்.
இந்த சுவாரஸ்யமான சந்திப்பும், அவர்கள் பேசிக் கொண்ட விதமும் கலகலப்பாக அமைந்தது.
நாங்கள் நண்பர்கள்:
திமுகவும், காங்கிரஸும் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்திருந்தன. ஆனால் இந்த முறை திமுக, காங்கிரஸை கழற்றி விட்டு விட்டது. இந்த நிலையில் திமுக வேட்பாளரிடம் காங்கிரஸ் வேட்பாளரே நேரடியாக ஆதரவு கேட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications