For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்ணுரிமைப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு முக்கியமானது... பினராயி விஜயன்

கேரளாவில் வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு முக்கியமானது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மதுரை: கேரளாவில் வைக்கம் கோவில் நுழைவு போராட்டத்தில் பெரியாரின் பங்கு முக்கியமானது என்றும் பெண்களுக்கு சம உரிமை தர வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டினார்.

மதுரையில் நடைபெற்ற தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு முன்னணி மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், ஜாதி ஒழிப்புக்காக தந்தை பெரியாரின் செயல்பாடுகள் இருந்தன. பெண்களுக்கு சம உரிமை தர வேண்டும் என பெரியார் போராடினார்.

கேரளாவில் வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு முக்கியமானது. தலித்துகளின் விடுதலைக்கான போராட்டத்தில் எல்லைகள் எதுவும் இல்லை. ஜாதிய ஒடுக்குமுறைகள் நாட்டின் ஒவ்வொரு பகுதியில் வித்தியாசமாக உள்ளது.

 தலித் பெண்கள்

தலித் பெண்கள்

ஒவ்வொரு 18 நிமிடத்துக்கும் ஜாதிய ஒடுக்குமுறை நிகழ்ந்து வருகிறது. நாள்தோறும் 3 தலித் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்படுகின்றனர். நாள்தோறும் 2 தலித் குடும்பங்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.

 ம.பி.யில் தாக்குதல்

ம.பி.யில் தாக்குதல்

உ.பி. மாநிலம் சஹாரன்பூரில் தலித்துகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதால் வெளியேறினர். இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக தலித்துகள் தாக்கப்பட்டனர். ம.பியில்தான் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகம் நடைபெறுகின்றன.

 குஜராத்தில் மிகவும் அதிகம்

குஜராத்தில் மிகவும் அதிகம்

ராஜஸ்தானிலும் மகாராஷ்டிராவிலும் தலித் பெண்கள் மீது தாக்குதல் நடத்தினர். டெல்லியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட 13 பேர் ஒருமாதத்தில் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அண்மைகாலமாக அதிகரித்துள்ளன.

 மேல்ஜாதி நடனத்தை ஆடியதற்கு...

மேல்ஜாதி நடனத்தை ஆடியதற்கு...

163% தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குஜராத்தின் உனாவ் கிராமத்தில் மாட்டு தோலை உரித்தார்கள் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டனர். காந்திநகரில் மீசை வைத்ததற்காகவும் மேல்ஜாதி நாட்டியத்தை ஆடியதற்காகவும் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டனர்.

 ஆண்டுதோறும் அதிகம்

ஆண்டுதோறும் அதிகம்

போர்பந்தரில் பொது இடத்தில் விவசாயம் செய்ததற்காக தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தலித் கர்ப்பிணி மீது தாக்கிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

தேசிய குற்ற ஆவண காப்பகத் தகவலில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் ஆண்டுதோறும் அதிகரித்துள்ளன.

 தண்டனையும் குறைவே

தண்டனையும் குறைவே

2012-ல் தலித்துகள் எதிராக 33,000 தாக்குதல்களும், 2015-ல் அது 45,000 தாக்குதல்களாக அதிகரிக்கவும் செய்துள்ளது. 2016-ல் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களை வெளியிடாதது உண்மையை மூடி மறைக்கும் முயற்சி ஆகும். தலித்துகள் மீதான தாக்குதல்களில் தண்டிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே வழங்கப்படுகிறது என்றார் அவர்.

English summary
Kerala CM Pinarayi Vijayan participated in dalit anti suppression conference in Madurai. He praises Periyar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X