For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரள காங்கிரஸ் அலுவலகம் விற்பனைக்கு.. ஓஎல்எக்ஸில் விளம்பரம் கொடுத்த நபர்.. உட்கட்சி பூசல்!

காங்கிரஸ் கட்சியின் கேரளா அலுவலகம் ஓஎல்எக்ஸ் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் கேரளா அலுவலகம் ஓஎல்எக்ஸ் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இது அந்த கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கேரளா காங்கிரசில் மிகவும் பெரிய அளவில் உட்கட்சி பூசல் நடைபெற்று வருகிறது. கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் ஒரு ராஜ்ய சபா சீட்டை யாருக்கு கொடுப்பதில் என்ற குழப்பம் நிலவி வந்தது. இதற்காக கட்சி இரண்டு பிரிவாக பிரிந்து சண்டை போட்டுக் கொண்டு இருந்தது.

Kerala Congress Office For Sale, a Man gives Ad in OLX amidst Party problem

கடைசியில் அந்த சீட் கேரள காங்கிரஸ் (எம்) மணிக்கு அளிக்கப்பட்டது. அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து ''கேரள காங்கிரஸ் (எம்)'' என்ற கட்சியை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த அவருக்கு இந்த சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மேலிடம் எடுத்த இந்த முடிவுற்கு மாநிலத்தில் பெரிய எதிர்ப்பு நிலவுகிறது. இதனால் கட்சி உடையும் நிலையில் கூட உள்ளது.

இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் கேரளா அலுவலகம் ஓஎல்எக்ஸ் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த கட்சி அலுவலகம் இருக்கும் திருவனந்தபுரம், சாஸ்தாமங்கலம், அலுவலகம் விற்பனைக்கு வந்துள்ளது. அனீஸ் என்பவர் இதை விற்பதாக புகைப்படம் போட்டு, பிரபல விற்பனை தளமான ஓஎல்எக்ஸில் வெறும் 10,000 ரூபாய் என்று விளம்பரம் கொடுத்துள்ளார்.

மேலும் விருப்பமுள்ள கட்சிகள் வாங்கலாம். முக்கியமாக கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் வாங்கலாம் என்றுள்ளார். இந்த இரண்டு கட்சிகளும், கேரளா காங்கிரஸ் (எம்) க்கு மிகவும் நெருக்கமாக கட்சியாகும். அதனால் அப்படி விளம்பரம் கொடுத்து கிண்டல் செய்துள்ளார்.

English summary
Kerala Congress Office For Sale, a Man gives Ad in OLX amidst Party problem due to Rajya Sabha Seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X