நெல்லையப்பர் கோயிலில் கேரள நம்பூதிரிகள் திடீர் பூஜை.. என்ன காரணம்!
நெல்லையப்பர் கோயிலில் கேரள நம்பூதிரிகள் திடீர் பூஜை நடத்தி இருக்கிறார்கள்.
Recommended Video

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் கேரள நம்பூதிரிகள் திடீர் பூஜை நடத்தி இருக்கிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலியில் இருக்கும் புகப்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோயிலின் நிர்வாக அலுவலகம் எதிரே நேற்று கேரள நம்பூதிரிகள் பூஜை நடத்தினார்கள்.

அங்கு 7 பேரைக் கொண்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜை நடந்த மண்டபத்தில் துணிகட்டி மறைக்கப்பட்டு இருந்தது.
இதனால் பக்தர்களால் உள்ளே என்ன நடக்கிறது என்பதைக் காண முடியவில்லை. இதுகுறித்து முதலில் எந்த விதமான அறிவிப்பு வெளியிடப்படாததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் பூஜை தொடர்பாக நிறைய வதந்திகளைப் பரவவிட்டனர். ஆனால் கோவில் நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.
கோவில் நிர்வாகம் அளித்த விளக்கத்தில் ''நெல்லையப்பர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாகக் கடந்த ஆண்டு கேரள நம்பூதிரிகள் மூலம் பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதில் கும்பாபிஷேகப் பணிகளில் இடையூறும் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தடுக்க பரிகார பூஜை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் காரணமாகவே பூஜை நடக்கிறது'' என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications