ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுக்கட்டும்...திரும்பி வர வேண்டாம்: குஷ்பு சுளீர்
சென்னை: ஜெயலலிதா அவர்களே நீங்கள் கொடநாட்டில் ஓய்வு எடுங்கள். திரும்பி வர வேண்டாம் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை ராயபுரம் சட்டசபை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மனோவை ஆதரித்து குஷ்பு நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 5 வருடத்தில் ஜெயலலிதா மக்களை நேரடியாக சந்தித்தது கிடையாது. நல்லது, கெட்டது என எதற்கும் வந்தது கிடையாது. ஒரு ஹிட்லர் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

சென்னையில் மழை வெள்ள பாதிப்பின்போது பார்வையிட வரவில்லை. அவருடைய தொகுதி ஆர்.கே.நகரில் கூட 10 நிமிஷம்தான் வந்தார். வேனில் இருந்து கூட இறங்கவில்லை. வேனில் இருந்தப்படியே வாக்காளப் பெருமக்களே என்று கூறினார். மக்களுடைய பிரச்சனை என்ன என்று கேட்கவில்லை. ஏனென்றால் சர்வாதிகார ஆட்சி. நான் செய்தது தான் சரி. மக்கள் என்னை ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துவிட்டார்கள்.
நான் என்ன செய்தாலும் நீங்க தாங்கிதான் ஆகணும் என நினைக்கிறார்கள். அவங்க என்ன நினைக்கிறாங்க, சும்மாவா ஓட்டு போட்டீங்க, பணம் கொடுத்தோம், ஓட்டு போட்டீங்க, அப்ப நான் சொல்றத கேளுங்க என நினைக்கிறாங்க. மக்கள் என்ன அடிமைகளா. அவங்க கட்சியில எம்எல்ஏ, எம்பிக்கள் அடிமைகள் மாதிரி காலடில கிடக்கிறார்கள். ஓட்டு போட்ட மக்கள் அப்படி இருக்க வேண்டும் என்று அவங்க ஆசைப்படுறாங்களா. அதற்கு மக்கள் அனுமதிக்கலாமா.
வரும் சட்டசபை தேர்தலில் அவங்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும். போதும் உங்களோட அராஜகம். இனி இதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். மானம் மரியாதையோட வாழ ஆசைப்டுகிறோம். பணத்துக்காக நாங்கள் ஓட்டு போட மாட்டோம் என மக்கள் சொல்ல வேண்டும்.
2011 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று ஜெயலலிதா சொல்கிறார். அப்படியென்றால் ஏன் உங்களுக்கு தோல்வி பயம் இருக்கிறது. இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பணத்துக்காக ஓட்டு போட மாட்டார்கள். ஜெயலலிதா அம்மையார் அவர்களே நீங்கள் கொடநாட்டில் ஓய்வு எடுங்கள். திரும்பி வர வேண்டாம். இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications