எம்எல்ஏக்களை குற்றவாளிகளைப் போல் சிறை வைக்க சசிகலாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது? குஷ்பு ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 131 பேர் மன்னார்குடி கோஷ்டியால் சிறை வைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். எம்எல்ஏக்களை சிறைவைக்க சசிகலாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையேயான மோலால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. முதல்வர் இருக்கை யாருக்கு என்ற போட்டியும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Khushboo condemns Sasikala for treating mlas like convicted culprits

அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேர் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ளதால் பீதியடைந்த மன்னார்குடி கோஷ்டி எஞ்சிய எம்எல்ஏக்களை காப்பாற்றிக் கொள்ள அவர்களை சொகுசு பேருந்தில் கடத்தி கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளது.

எம்எல்ஏக்களை சிறைபிடித்து வைத்திருக்கும் மன்னார்குடி கும்பலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் "கடத்தப்பட்டதுப்போல் 131 எம்எல்ஏக்கள் சொகுசுப் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை பற்றிதான் யோசிக்கிறேன்.

ஜனநாயகத்தில், இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு மாண்பு என்று ஏதாவது இருக்கிறதா? சிறையில் இருக்கும் குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதற்கு இந்தப் பெண்ணுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. பணமா? அதிகாரமா?" இவ்வாறு குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Khushboo condemns Sasikala for treating mlas like convicted culprits. Khushboo asking Sasikala in which base she is doing like this money or power?
Please Wait while comments are loading...