கிரைய பத்திரம்.. சின்ன சேலம் சாமியாரின் ஆபாசம்.. பென் டிரைவ் பார்த்து மலைத்த கள்ளக்குறிச்சி போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சாமியாரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. இந்த விசாரணையின் முடிவில் பல்வேறு அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகிவிட்டது.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.

Kiraya pathiram Kallakurichi Chinnasalem


இவருடைய வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு அய்யனார் கோவில் உள்ளது... இந்த கோயிலுக்கு சேலத்தை சேர்ந்த முத்தையன் என்பவர் அடிக்கடி வந்து சாமி கும்பிட்டுவிட்டு போவார்.. அதேபோல, பில்லி, சூனியம் எடுப்பது, பெண்களை வசியம் செய்வது போன்ற வேலைகளையும் முத்தையன் செய்வதாக கூறப்படுகிறது. எந்நேரமும் சாமியார் உடையிலேயே நடமாடி வருவாராம்.

சாமியார்: இந்த நிலையில், டிரைவருக்கும், முத்தையனுக்கும் திடீரென பழக்கம் ஏற்பட்டது... ஒருமுறை டிரைவருக்கு பண நெருக்கடி வந்தபோது, பணத்துக்கு நிறைய திண்டாடிவிட்டார். எனவே, தன்னுடைய 50 சென்ட் நிலத்தை 4 லட்சத்துக்கு முத்தையனிடம், கிரையம் செய்து தந்துள்ளாராம் டிரைவர்.

இப்படி நெருக்கடி சமயத்தில் முத்தையன் உதவியதால், அவருடனான நெருக்கம் டிரைவர் குடும்பத்துக்கு அதிகமாகிவிட்டது. இதனால், அடிக்கடி டிரைவர் வீட்டுக்கு, முத்தையன் வந்து செல்வது அதிகரித்தது..

ஒருகட்டத்தில், டிரைவரின் மனைவிக்கும், முத்தையனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுவிட்டது.. இந்த விஷயம் டிரைவருக்கு தெரிந்து கடுமையான அதிர்ச்சி அடைந்தார். அதனால், 2 பேரையும் கூப்பிட்டு, எச்சரிக்கை விடுத்தார் டிரைவர்,.

நெருக்கம்:
இதனால், டிரைவருடனான நட்பு முறியும் சூழலுக்கு வந்தது.. முத்தையனுடன் இனியும் பழக்கம் வைத்திருந்தால், தன்னுடைய மொத்த குடும்பத்திற்கு ஆபத்து வந்துவிடும் என்று உஷாரானார் டிரைவர்.. அதனால், முத்தையனுக்கு தரவேண்டிய பணத்தை வட்டியுடன் தயார் செய்து தந்துவிட்டு தன்னுடைய நிலத்தை திரும்ப தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.. இதுதொடர்பாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் வெடித்தது..

ஒருகட்டத்தில் சாமியார் முத்தையன், "கிரையம் செய்து தந்த நிலத்தை திருப்பி கேட்டால், உன் மனைவியுடன் நான் ஆபாசமாக இருந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பரப்பிவிடுவேன்" என்று மிரட்டினாராம்.

கிரையம் நிலம்: இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சின்னசேலம் போலீசில் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் போலீசார் முத்தையனை, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, சாமியார் பேசியதை கேட்டு போலீசாரே அதிர்ந்து போனார்கள்.. உடனடியாக சாமியார் முத்தையனின் லேப்டாப்பை வாங்கி சோதனை செய்திருக்கிறார்கள்.. அதில் ஏகப்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் இருந்ததை கண்டு, அதற்கு மேல் போலீசார் அதிர்ந்தனர்.. கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்திருக்கின்றன. லேப்டாப் தவிர, 5 செல்போன்கள், 5 பென்டிரைவ் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்..

சுயரூபம்:
இப்போது முத்தையனை போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர். நில விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட டிரைவர் புகாரை தரப்போய், சாமியாரின் மற்ற சுயரூபங்கள் வெளியே தெரியவந்துள்ளது.. இல்லாவிட்டால், மேலும் பல பெண்களை சாமியார் நாசம் செய்திருக்கக்கூடும் என்கிறார்கள்,.. ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்கள் யார்? இன்னும் இதுபோல எத்தனை குடும்பத்தை சாமியார் சீரழித்திருக்கிறார்? என்ற விவரங்களை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+