மின்சாரம் தாக்கி சிறுமிகள் பலி... அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil
  அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அக்கா-தங்கை பலி | ONEINDIA TAMIL

  சென்னை : கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து இரண்டு சிறுமிகள் நேற்று உயிரிழந்தனர். இதுகுறித்து விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யக்கோரி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையில் சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் பகுதியில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்தது.

  Kodungaiyur death: High court Asks TN Government to submit detailed report on

  இதனை அறியாத சிறுமிகள் அங்கு கிடந்த கம்பிகளை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

  கம்பி அறுந்து விழுந்தது குறித்து மின்சார வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

  இந்த சம்பவத்தில் உடனடியாக தங்களது பணிகளைச் செய்யாத சம்பந்தப்பட்ட 8 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்த விசாரணைக்கு வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

  இந்த முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த சம்பவம் குறித்த விரிவான விசாரணை குறித்து அறிக்கை கேட்டுள்ளது. மேலும், இழப்பீடு குறித்தும், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கை சமர்பிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இந்த வழக்கை நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இறந்து போன இரு சிறுமிகள் குடும்பத்திற்கு மாநில பொது நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Madras High Court Asks Tamilnadu Government to submit detailed report on Kodungaiyur Electrocution death of two girl children. Earlier Government suspended 8 officials who are responsible for the incident.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற