அதிகரிக்கும் நீரின் வேகம்... 21, 22ஆம் தூண்கள் சேதம்... உடையும் நிலையில் கொள்ளிடம் இரும்பு பாலம்
Recommended Video

திருச்சி: திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆங்கிலேயர் காலத்து பாலம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1924-ஆம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. சுமார் 792 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் ஸ்ரீரங்கத்தை இணைத்தது. இந்நிலையில் 90 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலத்தின் உத்தரவாத காலம் முடிவடைந்துவிட்டது.

இதையடுத்து பாலத்தின் வலுவிழந்த தன்மையை சுட்டிக் காட்டி பழைய பாலத்துக்கு பக்கத்திலேயே புதிய பாலம் ஒன்று கடந்த 2014-ஆம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த பழைய பாலம் நடப்பதற்கும் இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இங்கு 4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்கு அணைகள் நிரம்பி தண்ணீரானது முக்கொம்பு, மேட்டூர் அணைக்கு திருப்பப்பட்டது. அதன்படி முக்கொம்பு அணையிலிருந்து 87,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இது கொள்ளிடத்தை அடைந்ததால் கொள்ளிடம் நிரம்பியது.
கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு.. உடையும் நிலையில் பழைய பாலம்..#Kollidam #Bridge #Damage #Flood #Tamilnadu #Kerala pic.twitter.com/jqca86cqHB
— Oneindia Tamil (@thatsTamil) August 18, 2018
இதனால் பழைய பாலத்தின் 18ஆவது தூண் சேதமடைந்துள்ளது. பாலம் விரிசல் அடைந்தது. மேலும் வெள்ளப் பெருக்கின் வேகத்தாலும், மணல் அரிப்பாலும் 21 மற்றும் 22-ஆம் தூண்களும் சேதமடைந்து வருகின்றன. இதனால் பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வெள்ள நீர் வடிந்த பிறகு இந்த பாலம் இடித்து அகற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த வீடியோவை நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர் ஜெய்கார்த்திக் நாகரத்தினம் லால்குடியிலிருந்து அனுப்பியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications