• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கோவன் பாடல்கள்... ஃபேஸ்புக், டுவிட்டரில் அரசுக்கு எதிரான குரல்கள்

  By Mayura Akilan
  |

  சென்னை: 'மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடலைப் பாடிய மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த கோவன் மீதான கைது நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மக்களிடையே கவனம் ஈர்த்த கோவனின் பிரச்சாரப் பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.. அத்துடன், அவருக்கு ஆதரவான கருத்துக்களும் பதிவிடப்பட்டு வருகின்றன.

  மூடு டாஸ்மாக்கை மூடு.... ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயஸ்கார்டனில் உல்லாசம்.. என்று பாடல்களை பாடிய கோவன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்), 505 (1) பி, சி (வதந்திகளை பிரசுரித்து, பரப்பி மக்களை அரசுக்கு எதிராக செயல்படும்படி தூண்டுவது) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Kovan’s songs go viral on social media

  கோவன் இசையமைத்து பாடி உருவாக்கிய 'மூடு டாஸ்மாக்கை மூடு' பாடல் உட்பட பல்வேறு பாடல்களையும் 'வினவு' அதன் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. அந்தப் பாடல்களில் பெரும்பாலனவை அரசு அமைப்புகளுக்கு எதிரானவையாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப்பாடலில் ஜெயலலிதா போல் வேடமணிந்த ஒருவர் மதுவை பாட்டிலில் இருந்து கோப்பையில் ஊற்றுவது போல் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.

  மேலும், மது விழிப்புணர்வு, குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள தனி மனித சுதந்திரம் நிச்சயமாக இருக்கிறது. ஆனால், அத்தகைய விமர்சனங்களுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. சைபர் கிரைம் அதிகாரிகளில் ஒருவர் இந்தப் பாடலை இணையத்தில் கவனித்தார். அதன் அடிப்படையிலேயே கோவனை திருச்சியில் கைது செய்தோம். முதலில் அவர் ஒத்துழைக்கவில்லை. ஒருவழியாக நிலைமையை சமாளித்து அவரை கைது செய்தோம்" என்றார்.

  இதனிடையே, மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலுடன், கோவனின் பிரச்சாரப் பாடல்கள் பலவும் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகின்றன. கோவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நூற்றுக்கணக்கான கண்டனப் பதிவுகளை நெட்டிசன்கள் பதிவு செய்தவண்ணம் உள்ளனர். நேற்று காலை தொடங்கி அவ்வப்போது Kovan என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் தேச அளவில் ட்ரெண்டிங்கிலும் வலம் வந்தன.

  கடந்த 15 ஆண்டுகளில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தமிழகத்தில் வைகோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அரசியல் சார்புடையவை. இதனிடையே கோவன் கைது நடவடிக்கை குறித்து மக்கள் கலை, இலக்கிய கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஏ.சரவணன் கூறும்போது, கோவன் கைது செய்யப்பட்டது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயல்" என்று கூறியுள்ளார்.

  கோவனின் மகன் சாருவாஹன், என் தந்தையின் கைது மக்கள் கலை, இலக்கிய கழகத்தை மிரட்டும் செயல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மிரட்டும் செயல். இருப்பினும், மக்கள் கலை, இலக்கிய கழகம் தொடர்ந்து தனது பிரச்சாரங்களை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  The folk singer, Kovan, was booked under Section 124 A (sedition), 153 (wantonly giving provocation with intent to cause riot and 505 part (1) (b) (c) for publishing and circulating rumours with intent to cause fear or alarm among the public and induce them to commit offence against the State or a class or community, according to Chennai Central Crime Branch sources.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more