கிருஷ்ணகிரியில் பிரம்மாண்ட மாம்பழக் கண்காட்சி... வியக்கும் கூட்டம்! வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 25ஆவது அகில இந்திய மாம்பழக் கண்காட்சியை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தொடங்கி வைத்தார். கண்காட்சியில் பல ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரியில் வருடம்தோறும் மாம்பழக் கண்காட்சி ஜூன் மாததில் நடைபெறும். இந்தாண்டு 25ஆவது அகில இந்திய மாம்பழக் கண்காட்சியை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்துவைத்தார்.

 In Krishnagiri, 25th mango exhibition was inaugurated by minister Balakrishna reddy.

இந்த கண்காட்சியில் 30 அரங்குகள் அரசுத் துறை அரங்குகளும் 80 தனியார் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. மாம்பழக் கண்காட்சியில் 35 வகை மாம்பழங்கள் இடம்பெற்றுள்ள. அரசு தோட்டக்கலை சார்பில் பலவிதமான பூக்களும் இடப்பெற்றிருப்பது பார்வையாளர்களின் கண்களைப் பறிப்பதாக உள்ளது.

அரங்கில், வேளாண்துறை சார்பாக ஜல்லிக்கட்டு மாடு, மாங்காய்களாலும் பீட்ரூட்டாலும் உருவாக்கப்பட்டிருந்தது. இது பார்வையாளார்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தக் கண்காட்சி தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Krishnagiri, 25th mango exhibition was inaugurated by minister Balakrishna reddy. In this exhibition 35 varieties of mangoes exhibited.
Please Wait while comments are loading...