For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணசாமி டாக்டர் அல்ல... மதவெறி பிடித்த நோயாளி... முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி சாடல்

கிருஷ்ணசாமி டாக்டர் என நினைத்தேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது அவர் மத வெறி பிடித்த நோயாளி என்று என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கடுமையாக சாடியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி டாக்டர் இல்லை, அவர் ஒரு மதவெறி பிடித்த நோயாளி என்று முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கடுமையாக குற்றம்சாட்டினார்.

Recommended Video

    'பொம்பளை' கிருஷ்ணசாமிக்கு பாலபாரதி பதிலடி-வீடியோ

    அரியலூர் அனிதா அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்த
    புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, மாணவியின் தற்கொலைக்காக பரிதாபப்படலாம், ஆனால் அதை அங்கீகரிக்க முடியாது.

    அவர் அடுத்த முறையோ அதற்கடுத்த முறையோ நீட் தேர்வு எழுதியிருக்கலாம். நீட் தேர்வு எழுதினால்தான் திறமையான மருத்துவர்கள் உருவாக முடியும் என கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் அவருக்கு கண்டனங்கள் வந்தவண்ணம் இருந்தன.

     பாலபாரதியின் பகீர் தகவல்

    பாலபாரதியின் பகீர் தகவல்

    முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, கிருஷ்ணசாமி குறித்து தனது பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், சட்டமன்றத்தில் கிருஷ்ணசாமி பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதல்வரிடம் வந்து மருத்துவம் சேர உதவி கேட்டீர்கள். அடுத்த நிமிடமே ஜெயலலிதா மருத்துவம் படிக்க வழிவகுத்தாரே மறந்துவிட்டீர்களா என கேட்டார்.

     நான் மறக்கவில்லை

    நான் மறக்கவில்லை

    அதற்கு கிருஷ்ணசாமியோ நான் அதை மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப் பார்த்து வணக்கம்போட, இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடுங்கள் என்பதுபோல் வெடுக்கென்று முதல்வர் முகத்தை திருப்பிக்கொள்ள.. கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜை மீது பொத்தென்று விழுந்தது.

     இவருக்கு ஒரு நியாயமா

    இவருக்கு ஒரு நியாயமா

    தலித் மாணவிக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறே இல்லை. ஆனால் இப்படி புறவாசல்வழியாக உதவியைப் பெற்றுக்கொண்டவர் தமது மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருவதுதான் வேதனை என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

     கிருஷ்ணசாமி கருத்து

    கிருஷ்ணசாமி கருத்து

    இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் கிருஷ்ணசாமி. அப்போது அவர் கூறுகையில், பாலபாரதியை நான் சட்டமன்றத்தில் பார்த்தே இல்லை. அந்த பொம்பளையை நான் பார்த்தில்லை என்று பாலபாரதியை தரக்குறைவாக பேசியிருந்தார்.

     பாலபாரதியின் சுளீர் பதிலடி

    பாலபாரதியின் சுளீர் பதிலடி

    இதற்கு பாலபாரதி கூறுகையில், கிருஷ்ணசாமியை இதுநாள் வரை டாக்டர் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் டாக்டர் அல்ல நோயாளி.. அதுவும் மதவெறி பிடித்த நோயாளி என்பதை தெரிந்து கொண்டேன் என்றார் பாலபாரதி.

    English summary
    Ex MLA Balabharathi says that Puthiya Tamilagam party Chief Krishnasamy is not a doctor, he is a patient who has racism.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X