இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மீனவர்கள் 30 பேர் கைது!
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து, இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி 30 மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யயப்பட்ட 30 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications