விஷ மீன் தாக்கிய காயமடைந்த தமிழக மீனவரைக் காப்பாற்றிய இலங்கை கடற்படை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீனின் விஷக் கொடுக்கு தாக்கி காயமடைந்த தமிழக மீனவரை மீட்ட இலங்கைக் கடற்படையினர் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றி பின்னர் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிறிசேன அதிபராக வந்த பிறகு இலங்கை கடற்படையினரின் ஆவேசம் சற்று குறைந்தது போலத்தான் தெரிகிறது. கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டே பழகிப் போன அவர்களின் மனிதாபிமான முகத்தை நேற்று முதல் முறையாக தமிழக மீனவர்கள் பார்க்க நேரிட்டது.

Lankan navy rescues TN fisherman

நேற்று ராமேஸ்வரம் கடலோரப் பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்ற மீனவர் இந்தியா- இலங்கைக்கு இடையிலான கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது, அவர் பிடித்த மீன்களில் ஒன்று தனது விஷக் கொடுக்கினால் குபேந்திரனை தாக்கியது. இதில் விஷம் பாய்ந்து அவர் மயங்கி விழுந்தார். அவர் தனியாக படகில் மயங்கி கிடப்பதை அப்பகுதி வழியாக ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் கவனித்து விரைந்து வந்தனர்.

அவரது உடலில் தைத்திருந்த மீனின் விஷ முள்ளை அகற்றிய இலங்கை கடற்படையினர், அவருக்கு விஷ முறிவு மருந்துடன் கூடிய குளூக்கோஸ் ஏற்றி, சுயநினைவுக்கு திரும்பிய பின்னர் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+